முழுக் கொள்ளளவில் மேட்டூர் அணை... 2.10 லட்சம் கனஅடி நீர் திறப்பு... ஊருக்குள் புகுந்த வெள்ளம்!
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பைக் கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

முழுக் கொள்ளளவில் மேட்டூர் அணை
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 20 நாட்களில் அணைக்கு 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 100 டி.எம்.சி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி வீதமும், எல்லீஸ்சேடலான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,87,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
இதன் காரணமாக காவிரி ஆற்றின் இரு கரைகளில் வெள்ளப் கரைபுரண்டு ஓடுகிறது. கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தின் வழியாக வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக தவிட்டுப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் தோட்டங்களில் வெள்ள நீர் புகுந்தது. குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. மீன் பிடிக்க, கரைகளில் குளிக்கக், செல்ஃபி எடுக்கக் கூடாது என்றும் மாவட்டம் சார்பில் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

விளைநிலங்களில் புகுந்த வெள்ளம்
மேலும், காவேரி கரையோரம் உள்ள தளவாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழைத்தார், கோரை புல், தென்ன மரம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். முக்கொம்பு மேலாண்மைக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வரத்தால் திருச்சியில் 250 ஏக்கர் வாழை சேதம் அடைதுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் இருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என காவிரி ஆற்றுக்கு குளிக்கவும் துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரித்துள்ளார். மேலும் இப்பகுதி முழுவதும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கொம்பு அணை
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாகவும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காரணமாக முக்கொம்பு அணைக்கு சுமார் வினாடிக்கு 2.5 லட்சம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதி மற்றும் காவிரி கரையோர பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கொள்ளிடம் ஆறு பகுதியான திரு வளர்ச்சோலை மற்றும் உத்தமர்சீலியில் தரைப்பால மூலமாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வெள்ளம் புகுந்ததால், அங்கு பயிரிடப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் வாழை நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியில் உள்ள பிச்சாண்டார் கோவில், வாழவந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள தேவாலயம், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இம்மக்களுக்கு உணவு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பில்லூர் அணைக்கு நீர்வரத்து
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் முக்கிய நீர் பிடிப்பான குந்தா மற்றும் கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் காரணமாக பில்லூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பில்லூர் அணைக்கான நீர் வரத்து 14,000 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 100அடியில் தற்போதைய நீர் மட்டம் 97அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்படுகிறது. 14,000 கன அடி தண்ணீர் விநாடிக்கு பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் வெள்ளம்
பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லுகிறது ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications