மேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு.. பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது!
Recommended Video

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17000 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பின. தொடர் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று வரை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 19000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 17000 கனஅடியாக குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.30 அடியாகவும், நீர்இருப்பு 89.22 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் திறப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து மேலும் சரியும் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications