தைரியம் இருந்தா என் மேல வழக்கு போட்டு பாருங்க.. லிஸ்ட்டை கையில் வைத்து மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!
சேலம்: இன்று சேலத்தில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், ஒரு லிஸ்ட்டை கையில் எடுத்து காட்டினார். நான் சொல்வதில் தவறு என கூறினால், தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால் என் மேல வழக்கு போட்டு பாருங்கள் என சவால் விட்டுப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று புதிய அவதூறு பிரச்சாரத்தைக் கிளப்பியிருக்கிறார். அதற்கு ஏதாவது தரவுகளை ஆதாரமாகச் சொல்கிறாரா? இல்லையே! பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது! அப்போது நீங்கள் எங்கு சென்றீர்கள்? அந்த மாநில முதலமைச்சரைக் குறைந்தபட்சம் பதவி விலக வைக்க முடிந்ததா?
இதுவரை நடக்காத கொடூரமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களே, அப்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்ததே... அப்போது ஒரு நாட்டின் பிரதமராக நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயே திறக்கவில்லையே! பா.ஜ.க.ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
என் கையில் ஒரு பட்டியலே இருக்கிறது. நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறிவிட்டு போகமாட்டேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ.. சமூகச் சேவகர்களோ இல்லை.. எல்லோரும் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள்! நான் சொல்வதில் தவறு என கூறினால், தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால், திராணி இருந்தால் என் மேல வழக்கு போட்டு பாருங்கள், நான் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.கவில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்த ரௌடிகள் பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்.
32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் தெளிவாக இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா?
நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் உங்களிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக இந்தப் புத்தகத்தை வாங்கி கிராஸ் வெரிஃபை செய்துவிட்டு அதற்குப் பிறகு எங்களைப் பற்றி பேசுங்கள் பிரதமர் மோடி அவர்களே!" என ஆவேசமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications