'கபடதாரி' ஓபிஎஸ்! அதுவும் தேவர் படத்தோடு.. பன்னீருக்கு எதிராய் திரண்ட முக்குலத்தோர்? புது டிவிஸ்ட்!
சேலம்: சேலம் மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை கபடதாரி என கூறி போஸ்டர் அடித்து ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத் தலைமையாக அறிவிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பினர் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா கேட்டுகளும் அடைக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக பொதுக் குழுவை கூட்ட எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. அது போல் எடப்பாடி தரப்புக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

ஓபிஎஸ்ஸுக்கு இரு சதவீதம்
ஓபிஎஸ்ஸுக்கு வெறும் இரு சதவீத ஆதரவு மட்டுமே உள்ளதாக எடப்பாடி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில் அதிகமாக இருக்கும் சமூகங்களில் ஒன்று முக்குலத்தோர். இந்த சமூகத்தினரின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு தென் மண்டலத்தில் வெற்றி சொல்லலாம்.

தென் மாநிலங்கள்
அந்த வகையில் தென் மாநிலங்களில் அதே சமூகத்தை சேர்ந்த ஓபிஎஸ்ஸுக்கு பரவலாக ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டது. எனினும் சட்டசபை தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தென் மாநிலங்களில் அதிமுகவுக்கு சறுக்கலே ஏற்பட்டது.

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக போஸ்டர்
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக முக்குலத்தோர் சமூகத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரின் படமும் உள்ளது. அந்த போஸ்டரில் தேசியம் தெய்வீகம், எனது இரு கண்கள் என தன் வாழ்நாளையே தமிழகத்திற்காக அர்ப்பணித்தவர் பசும்பொன் தேவர். வீரம் செறிந்த எமது தென்னகத்து தேவர் இன சொந்தங்களை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் கபடதாரியை அடையாளம் காண்பீர்.
Recommended Video

நம்பமாட்டார்கள்
தெய்வீக தேவர் இன மக்கள் ஒரு போதும் இந்த கபடதாரியை நம்பமாட்டார்கள் என குறிப்பிட்டு தேசிய மக்கள் இயக்கம், நிலவாரப்பட்டி, சேலம் மாவட்டம் என அந்த போஸ்டர் உள்ளது. மேலும் ஓபிஎஸ் படத்தை கிராஸ் மார்க் போட்டுள்ளார்கள். தேவர் சிலையை எடப்பாடி பழனிச்சாமி வணங்குவது போல் படம் உள்ளது. எனவே முக்குலத்தோரின் ஆதரவை வைத்துக் கொண்டு அதிமுகவில் அரசியல் செய்ய நினைத்த ஓபிஎஸ்ஸுக்கு தற்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. இவர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி என்பதால், அதே சமூகத்தை சேர்ந்த சசிகலாவுடன் ஓபிஎஸ் அரசியல் செய்தாலும் தோல்வியே மிஞ்சும் என தெரிகிறது.
-
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்!












Click it and Unblock the Notifications