நிச்சயம் தட்டி கேட்போம்.. கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளா.. முக ஸ்டாலின் ஆவேசம்
சேலம்: கடன் வாங்கியவர்களை தப்பவிட்டவர்கள் தேசியவாதிகள், கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகளா என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் திராவிட கழகத்தின் 75ம் ஆண்டு விழாவையொட்டி பவளவிழா செவ்வாய்கிழமை இரவு நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், 'திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள், வீழ்ந்துபோனார்கள். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. முன்பை விட திராவிடர் கழகம் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் நம்மை தேச விரோதிகள், பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்கள். மாநிலத்தையும், மாவட்டத்தையும் பிரிக்கும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள்.
கடன் வாங்கியவர்களை தப்பவிட்டவர்கள் தேசியவாதிகள், கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகளா? ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாங்கள் நிச்சயம் தட்டி கேட்போம்.
தமிழகத்தை மத்திய பாஜக அரசு பல்வேறு வகைகளில் பழிவாங்கி வருகிறது. இந்திய பொருளாதாரம் அதல பாதளத்தில் சென்று கொண்டிருக்கிறது. மோட்டார் வாகனத்துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாகனங்கள் விற்பனை 31 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் நிதிச் சிக்கலில் தவித்து வருகிறது. இதை மறைக்கவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கைது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு நடத்தி வருகிறது" என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications