அந்த நடிகைதான் வேண்டும்.. அடம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! கூவத்தூரில் நடந்த கூத்து.. அதிமுக மாஜி ஆவேசம்
சேலம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான புகார்களை வைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருக்கும் முன்னணி நடிகையின் பெயரை இணைத்து கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் குறித்து அவர் பேசி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஷாக்கிங் ரகசியங்கள், குற்றச்சாட்டுகளை ஏ.வி.ராஜு அடுக்கி வருகிறார். முக்கியமாக எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் தலைவராக இருந்த போது செய்த ஊழல் பட்டியலை வெளியிடட்டுமா என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு.

ஏன் நீக்கம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்து இருப்பதாக சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, ஏ.வி.ராஜுவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஏ.வி.ராஜு பேட்டி: இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏ.வி.ராஜு அளித்த பேட்டியில், என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. எடப்பாடி கட்சியை நடத்த தெரியாமல் நடத்திக்கொண்டு இருக்கிறார். கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்தானே இவர்.
இவருக்கு எப்படி கட்சி விதிகள் தெரியும். கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடிக்கு தெரியவில்லை. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.
கூவத்தூர் கூத்து: நீ சாதாரண ஒரு எம்எல்ஏ. நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் என்று தெரியும். அதிமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் என்ன கூத்து அடித்தார் என்று தெரியும். அந்த பிரபல நடிகையை அவர் கேட்டார். அவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் . கருணாஸ் அங்கே இருந்தார். அவர்தான் ஏற்பாடு செய்தார்.
எல்லா நடிகையையும் ஏற்பாடு செய்தது கருணாஸ்தான். இதற்கெல்லாம் காசு கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். அதிமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் குடிக்க மாட்டார். ஆனால் பெண்கள் விஷயத்தில் வீக். அதனால் பல நடிகைகளை ஏற்பாடு செய்தார். பல நடிகைகள் களமிறக்கப்பட்டனர். சின்ன நடிகைதான் வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் அடம் பிடித்தார்.
இதற்கு நான் ஆதாரம் காட்ட முடியாது. ஆனால் இதெல்லாம் நடந்தது. ஒரு பெண் கிட்ட போனதற்கு எப்படி ஆதாரம் காட்ட முடியும். பல எம்எல்ஏக்கள்.. எங்களால் இது மட்டும்தான் செய்ய முடியும். வேறு வழியில்லை. ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். யாருக்கெல்லாம் எது எது தேவையோ அதையெல்லாம் தீர்த்துக்கொண்டார்கள். அங்கே செல்லூர் ராஜு ஆடியதை பார்த்து இருப்பீர்கள். சிவி சண்முகம் டான்ஸ் ஆடியதை பார்த்து இருப்பீர்கள்.
இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தது எடப்பாடி பழனிசாமிதான். பணம் செலவு செய்தது அவர்தான். அவர்தான் பணம் கொடுத்தார். எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டுமே? அதற்கு எடப்பாடிதான் பணம் கொடுத்தார் .
இதை எல்லாம் செய்துவிட்டு இப்போது என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். என்னை நீக்கியது போல அதிமுக மாவட்ட செயலாளர்கள் யாரையாவது 2 பேரை எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்க முடியுமா? அப்படி 2 மா.செக்களை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவியே பறிபோய்விடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா சார்பாக அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டதை குறிப்பிட்டு ராஜு இந்த குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ராஜு குறிப்பிட்ட நடிகை தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி வரிசையில் இருப்பவராகும். இந்த குற்றச்சாட்டு வைரலாகிவிட்ட நிலையில், இதுவரை அந்த குறிப்பிட்ட நடிகை இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?











Click it and Unblock the Notifications