ஆட்டத்தை தொடங்கிட்டாரு சேலம் அருள்.. அன்புமணி போட்ட ரெட் கார்டு.. திமுக பின் வாங்க இதுதான் காரணமா?
சேலம்: பாமகவிலிருந்து விலகிய சேலம் அருள், முதலில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்றார்கள்..அடுத்து தவெக பக்கம் சாய்கிறார் என்றார்கள்.. அதன்பின் திமுக, அதிமுக என 2 திராவிடக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொன்னார்கள்.. ஆனால், இப்போது ஒரு புதிய அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அன்புமணி கதவை மூட, திராவிடக் கட்சிகளும் பின்வாங்கிய சூழலில், சேலம் அருள் எடுக்க போகும் அந்தப் புதிய நகர்வுதான், அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது..!!
டாக்டர் ராமதாஸின் 61-வது திருமண நாளில், தந்தையும் மகனும் கட்டித்தழுவி கண்ணீர் மல்க சமரசம் செய்துகொண்ட நிகழ்வு, அந்த கட்சியின் தொண்டர்களிடையே ஒருபுறம் நிம்மதியை தந்தாலும், இன்னொருபக்கம் புயலை கிளப்பி விட்டு சென்றது..

குறிப்பாக, தந்தை-மகன் மோதலில் ராமதாஸ் அணியின் தீவிர முகமாக செயல்பட்ட சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அரசியல் ரீதியாக தனித்து விடப்பட்ட உணர்வில் இருந்து வருகிறார்.
ராமதாஸ் - அன்புமணி
"ராமதாஸை நம்பி பயணித்து பல கோடிகளை இழந்து, நட்டாற்றில் நிற்கிறோம்.. இந்த இணக்கம் முன்பே நடந்திருந்தால் பாமகவிற்குப் பெரிய அரசியல் அந்தஸ்தே கிடைத்திருக்கும், யாரும் கடனாளியாகியாக நின்றிருக்க மாட்டார்கள், இந்த காலங்கடந்த இணைப்பால் தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது" " என்றெல்லாம் குமற ஆரம்பித்துவிட்டார் அருள்..
இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, சில நாட்களுக்கு முன்பு, வட மாவட்டங்களைச் சேர்ந்த அதிருப்தி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையும் நடத்தியிருந்தார்.
சேலம் அருள் என்ன முடிவு?
அதுமட்டுமல்ல, புதிய கட்சியை அருள் தொடங்கப்போகிறார் என்று ஒரு சாராரும், வளர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகம் நோக்கி நகர போகிறார் என்று இன்னொரு சாராரும், இரண்டுமே இல்லை திமுக பக்கம் செல்ல போகிறார் என்று மற்றொரு சாராரும், இவர்களில் யாருமே இல்லை, அதிமுகவுக்கு தாவ போகிறார் என்று வேறு சிலரும் யூகங்களை அள்ளித் தெளித்தனர்.
இதனால் அருள் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற ஆர்வம் வடமாவட்ட அரசியலில் பலமாகவே நிலவியது.. இப்போது அதுகுறித்த ஒரு பிரத்யேக தகவல்தான் நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி பார்ப்போம்.
பாமக அருள் - என்.ஆர்.காங்கிரஸ்
அருள் விரைவில் என்.ஆர்.காங்கிரசில் சேரப் போகிறாராம். பாமகவில் ஜிகேமணியையும் அவரது மகன் தமிழ்க் குமரனையும் இணைத்துக்கொள்ள மாட்டேன் என உடம்பு பிடியாக இருக்கும் டாக்டர் அன்புமணியிடம், பாமகவின் முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் அருள் விஷயத்திலும் அதே இறுக்கம் இருந்து வருகிறது.
ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் முடிந்து இருவரும் ஒன்றாகி விட்ட நிலையிலும்கூட, அன்புமணியை தொடர்பு கொள்ள முயற்சித்தாராம் அருள். ஆனால், அவரது அழைப்பை ஏற்கவே இல்லையாம் அன்புமணி.
நிபந்தனை ஏற்காத திமுக
இதற்குபிறகுதான் திமுக தலைமை அருளை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.. ஆனால், அருள் முன்வைத்த சில நிபந்தனைகளால் அந்த பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை..
அதேபோல, அதிமுக எடப்பாடி பழனிச்சாமியும், அருளிடம் பேசியதாகவும், அவரிடமும் திமுகவிடம் வைத்த கோரிக்கையையே வைக்க, அவரும் அதன்பிறகு அருளிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டாராம்.
புதுச்சேரி ரங்கசாமி
இதற்கு பிறகுதான், பாமகவில் மீண்டும் நம்மால் இணைய முடியாது, நம்மை மீண்டும் கட்சிக்குள் செயல்பட அன்புமணிக்கு விருப்பமில்லை. அதனால், பாமகவை நினைத்து ஏங்கி கிடக்கமுடியாது என யோசித்த அருள், புதுச்சேரி முதல்வர் என்.ஆர்.ரெங்கசாமியின் என்.ஆர்.காங்கிரசில் இணையலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்திருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது,
என்.ஆர். காங்கிரசை தமிழகத்தில் முன்னெடுக்கும் பொறுப்பு அருளுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. விரைவில் என்.ஆர்.காங்கிரசில் வெளிப்படையாக இணையவிருக்கிறார் பாமக அருள் என்பதே நமக்கு தற்போதுள்ள எக்ஸ்ளூசிவ் தகவல் !
பாமக ஓட்டு பிரியுமா
ஒருவேளை அருள், என்ஆர் காங்கிரஸ் பக்கம் சென்றால், அது பாமகவுக்கு சவாலாக அமையலாம்.,
குறிப்பாக, ராமதாஸ் அணியில் தீவிரமாக உழைத்த திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் அருள் பக்கம் நகர்ந்தால், அது பாமகவின் வாக்கு வங்கியை நேரடியாகவே பாளமாக பிரிக்கக்கூடும்..
காடுவெட்டி குருவின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிருப்தியாளர்களை போல, அருளின் இந்த புதிய முயற்சியும் பாமகவின் பாரம்பரியக் கோட்டைகளில் விரிசலையும் ஏற்படுத்தலாம்... அதிலும் பாமகவின் கோட்டையான தர்மபுரியில் விரிசல் எழலாம். என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
- நமது சிறப்பு நிருபர்


Click it and Unblock the Notifications
