பீஸ் கட்டுற காசு போச்சு! ஆன்லைன் ரம்மியால் 75 ஆயிரம் காலி! பயத்தில் விஷம் குடித்த கல்லூரி மாணவன்!
சேலம் : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது 75 ஆயிரம் ரூபாயை இழந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி
ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

வல்லுநர் குழு
தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைமுறைகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

அதிர்ச்சி
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது 75 ஆயிரம் ரூபாயை இழந்ததால் பொறியயல் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் தலைவாசல் உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ், இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மாணவன் தற்கொலை முயற்சி
இந்த மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது 75 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். அதை அறிந்த அவரது பெற்றோர், மாணவரை ஆபத்தான நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications