சேலத்தில் மசாஜ் சென்டர் அழகி கொலை.. சென்னையைச் சேர்ந்த காதலன் கைது
சேலம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (27) என்ற பெண், சேலத்தில் 3 இடங்களில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இவர் கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேஸில் அடைத்து வீட்டில் உள்ள பரண் மீது வீசப்பட்டு கிடந்தது. இந்த வழக்கில் அவரது காதலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு இருவர்கள் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (27) என்ற பெண், சேலத்தில் 3 இடங்களில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார்.
சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த தேஜ்மண்டல், கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேஸில் அடைத்து வீட்டில் உள்ள பரண் மீது வீசப்பட்டு கிடந்தது.

இரண்டு பேர்
இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். தனிப்படை விசாரணையில் தேஜ்மண்டல், தனது மசாஜ் சென்டரில் பணியாற்றிய 4 பேரை ஒரு வீட்டில் தங்க வைத்திருக்கிறார். கடைசியாக சூட்கேஸ் வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் வெளியே வந்து கதவை பூட்டுவதும், அந்த ஆண், சிசிடிவி கேமராவை தள்ளி விடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை வைத்து பார்க்கும்போது, அவர்கள் தான் இக்கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தப்பிய பெண்கள்
இதுதொடர்பாக அவரிடம் வேலை பார்த்து தலைமறைவான 4பேரை பற்றி விசாரித்த போது, வங்கதேசத்தை சேர்ந்த லப்லு, இளம்பெண் நிசி, மும்பையை சேர்ந்த இளம்பெண் ரிஷி, பெங்களூரை சேர்ந்த ஷீலா எனத்தெரியவந்தது. லப்லு மற்றும் 3 இளம்பெண்களை போலீசார் தேடி வந்தனர். இதில், லப்லு, நிஷி ஆகியோர் காதலர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் வங்கதேசம் தப்பி விட்டதாக தெரிகிறது.

பிடித்து விசாரணை
ஆரம்ப கட்ட விசாரணையில் சேலத்தில் தேஜ்மண்டலை கொலை செய்துவிட்டு, பெங்களூருக்கு 4 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனிடையே சேலம் பள்ளப்பட்டி பகுதியில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியது தொடர்பாக தேடப்பட்ட ஆத்துரை சேர்ந்த பிரதாப் சென்னையில் தலைமறைவாக இருந்தபோது பிடிபட்டார். அவரது காதலிதான் தேஜ்மேண்டல் என தெரியவே அவரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை ஏன்
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் "தேஜ்மேண்டல், லப்லுவுக்கு ரூ,2 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அதனை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவர்தான் கொன்றிருக்கலாம்" என பிரதாப் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். முக்கிய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications