தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்
Recommended Video
சேலம்: அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அமமுகவின் சேலம் மண்டல செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தமிழகத்தில் எந்த துறையும் சிறப்பாக செயல்படவில்லை. கல்வித் துறையும் முறையாக செயல்படவில்லை. மேலும் மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கான விலக்கு கூட பெற முடியவில்லை.

மக்களை ஏமாற்றும் செயல்
எட்டுவழி சாலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டத்தில் மக்கள் உணர்வுக்கு மரியாதை அளிப்பதாக தேர்தலின் போது கூறிய முதல்வர், தற்போது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

மறுப்பு
இந்நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதியில் மட்டும் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. ஆனால்
பயத்தின் காரணமாகதான் உள்ளாட்சி தேர்தலை நடத்த மறுத்து வருகிறார்கள்.

பதிவு
சட்டமன்ற தேர்தல் வரும்வரை உள்ளாட்சி தேர்தலை காலம் கடத்தி விடுவார்கள். மேலும் அமமுக வலுவாக உள்ளது. யாரோ ஒரு சிலர் சுய விருப்பம் காரணமாக விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை. கட்சியை பதிவு செய்வதற்கான செயல்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.

நிர்வாகிகள்
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமிஷனுக்காகவே அடுத்தடுத்து பாலங்களை மட்டுமே கட்டி வருகிறார். மக்கள் விரும்பாத செயல்களை செய்வதே அவரது வேலை என்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட கழக மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications