வானதி சீனிவாசன் கையிலெடுத்த சேலம் ரேஷன் அரிசி.. கூட்டுறவு அங்காடிகளில் இதுதான் நடக்கிறதா

Subscribe to Oneindia Tamil

சேலம்: தவெக அரசை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மின்சாரக் கொள்முதல் முதல் நிர்வாக அனுபவமின்மை வரை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், இப்போது சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்குவதாகக் கூறிவிட்டு இலவச ரேஷன் அரிசியையே மீண்டும் வழங்கியிருப்பதாக எழுந்த புகாரைச் சுட்டிக்காட்டி, "இதுதான் சாமானியர்களுக்கான அரசா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

Vanathi Srinivasan

தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, பட்டதாரிகள் மற்றும் வேலையில்லாதவர்களுக்குத் தனித்தனியாக உதவித்தொகை, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி எனப் பல்வேறு வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் அளித்திருந்தார்.. ஆனால், அரசு 6 மாதங்களைக்கூட நிறைவு செய்யாத நிலையில் 2 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன..

6 மாதத்தில் 2 இடைத்தேர்தல்

இன்றைக்கு இந்த அரசு 6 மாதங்களைக்கூட நிறைவு செய்யவில்லை. அதற்குள் இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. வேறு கட்சியிலிருந்து ஓர் எம்.எல்.ஏ.வை அழைத்து வந்து, அவரை ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் அதே நபரைக் கட்சி வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். ஆனால், வெற்றி வாக்கு வித்தியாசம் ஆயிரக்கணக்கில்தான் இருக்கிறது.

இதிலிருந்து ஒன்றை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய ரீல்ஸையும், பாடல்களையும் மக்கள் ரசிப்பார்கள். ஆனால், ஆட்சியைச் சரியாக நடத்தவில்லை என்றால், நிச்சயமாகத் தங்களுடைய அதிருப்தியை உங்களிடம் காட்டத் தொடங்குவார்கள்.

தவெக, திமுக

தவெக தங்களைத் தூய சக்தி என்று சொல்லிக்கொண்டது. ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகவும், வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுவதாகவும் கூறப்படும் நிலையில், நீங்கள் எந்த அளவுக்குத் தூய சக்தியாக இருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. திமுக அரசின் நீட்சியாக தான் தமிழக வெற்றி கழக அரசை நாங்கள் பார்க்கிறோம். சுதந்திரமான ஒரு நாட்டில் விருப்பப்படி, பாடல்களும், ஊர்வலங்களும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்கிறது சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் எதுவும் செய்யவில்லை.. திமுக அரசினுடைய நீட்சியாகத்தான் தவெக அரசை நாங்கள் பார்க்கிறோம் என்றெல்லாம் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இலவச ரேஷன் அரிசி

இந்நிலையில், இன்று மீண்டும் தவெக அரசு மீது வானதி பாய்ந்துள்ளார்.. இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"விண்ணை முட்டும் விலைவாசியும், உயரும் அரிசி விலையும் சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் வேளையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக சேலத்தில் தமிழக அரசு கூட்டுறவு அங்காடிகளில் குறைவான விலையில் அரிசி வழங்குவதாகக் கூறி, இலவச ரேஷன் அரிசியையே மீண்டும் கொடுத்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தவெக அரசு

கடந்த கால திமுக ஆட்சிக்கு நாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் தவெக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. மக்களுக்கான அரசாக இல்லாமல், பொதுமக்களை வாட்டி வதைக்கும் அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது, இந்த அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்திருப்பதையே காட்டுகிறது.

மீண்டும் கூறுகிறேன்! இது மக்களுக்கான மாற்றம் தரும் அரசு அல்ல! ஏமாற்றம் தரும் அரசு" என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி மின்சாரக் கொள்முதல், தேர்தல் வாக்குறுதிகள், சட்டம் ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், ஆர்.எஸ்.எஸ். பேரணி எனப் பல்வேறு விவகாரங்களில் தவெக அரசை விமர்சித்து வந்த மூத்த தலைவர் வானதி சீனிவாசன், இப்போது சாமானிய மக்களுக்கு அரிசி வழங்கும் விவகாரத்திலும் கேள்வி எழுப்பியுள்ளது கவனம் பெற்று வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+