Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசை ஆசையா கிட்ட போன "பாமக" புள்ளி.. எடப்பாடி டக்குனு செய்த வேலைய பாருங்க.. மேடையிலேயே.. அப்ப திமுக?

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

சேலம்: அதிமுக - பாமக கூட்டணியில் உள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம் அரசியல் களத்தில் மீண்டும் வட்டமடிக்கிறது.. காரணம், பாமக எம்எல்ஏ அருள்..!!
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பாமகவை சேர்ந்த அருள் ராமதாஸ்... இதுவரை எந்த ஒரு எம்எல்ஏவுக்கும் இல்லாத ஒரு சிறப்பு, பாமக அருளுக்கு உண்டு..

காரணம், இவர் தன்னுடைய தொகுதி முழுவதும் நடமாடும் அலுவலகம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.. ''உங்கள் தேவைகளை அறிய, உங்களை தேடி''என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தவர்.

 ஸ்பெஷல் வேன்

ஸ்பெஷல் வேன்

இதற்காகவே, ஸ்பெஷலாக ஒரு மாருதி ஈகோ வேனை ரெடி செய்திருந்தார் எம்எல்ஏ அருள்.. அந்த வேனுக்குள், லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், என ஒரு ஆபீசுக்கு தேவையான எல்லா வசதிகளையும் தயார் செய்தார்.. ஹைலைட்டாக, டைப்பிஸ்ட்கூட இந்த வேனுக்குள் பணியாற்ற அமர்த்தப்பட்டார்.. இதெல்லாம் எதற்காக என்றால், ஒரு எம்எல்ஏவை தேடி தொகுதி மக்கள் வரக்கூடாதாம்.. மக்களை தேடிதான் எம்எல்ஏ போக வேண்டுமாம். அதற்காகவே மொபைல் எம்எல்ஏ ஆபீஸை தொகுதிக்குள் நடமாட விட்டவர் அருள்..

 படக்கென விழுந்து

படக்கென விழுந்து

பொதுமக்களும் இந்த வேனை பார்த்ததுமே, கையில் கோரிக்கையுடன் வந்து மனுக்களை தர துவங்கினர்.. அந்தவகையில், பாமக எம்எல்ஏ அருள், தொகுதி மக்களிடம் பேசப்பட்டார்.. இப்போது விஷயம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியை பார்த்ததுமே அருள் ஏன் இவ்வாறு செய்தார்? என்ற கேள்விதான் சேலத்துக்குள் எழுந்துள்ளது.. அப்படி என்னதான் நடந்தது? மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள் விளையாட்டு அரங்கம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அரங்கத்தை துவக்கி வைத்ததுடன், வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கபடி போட்டியையும் தொடங்கி வைத்தார்...

 மேடையில் ஷாக்

மேடையில் ஷாக்

இதே நிகழ்ச்சிக்கு பாமக அருள் வந்திருந்தார்.. அரங்கத்தில் நுழைந்த அவர், வேகவேகமாக மேடையில் ஏறியவர், நேராக எடப்பாடி பழனிசாமியிடம் சென்று அவரது கால்களில் பொத்தென்று விழுந்தார்.. பிறகு, எடப்பாடியின் கைகளை குலுக்கி, தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இதை பார்த்த அனைவருமே ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ இதனை எதுவுமே கண்டுகொள்ளவில்லை.. அருளுக்கு பின்னால் வரிசையாக நின்றிருந்த அடுத்தடுத்த தொண்டர்களை கவனிக்க ஆரம்பித்தார்..

 கடைசி பார்வை

கடைசி பார்வை

இதை பார்த்ததும் இந்த இடத்தில் மேலும் பரபரப்பு கவ்விக் கொண்டது.. எடப்பாடி பழனிசாமி தன்னை கவனிக்கவில்லை என்பதை அறிந்த அருள், இப்படியும் அப்படியுமாக மேடையிலேயே தடுமாறினார்.. பிறகு, கடைசியாக எடப்பாடி பழனிசாமியின் பார்வையில் படும்படி, இடது பக்கம் சென்று நின்று கொண்டார்.. அப்போது விழா குழு சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததையடுத்து, அவருக்கு சால்வையும் அணிவிக்கப்பட்டது.

 படக் படக்

படக் படக்

இந்த விழா இனிதே நடந்து முடிந்தாலும், அருள் ஏன் எடப்பாடி பழனிசாமி காலில் விழ போனார் என்பதுதான் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயன்று வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. மேலும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து, அன்புமணியோ அல்லது எடப்பாடி பழனிசாமியோ இதுவரை வாய்திறந்து எதுவுமே சொல்லவில்லை.. அந்தவகையில், அதிமுக - பாமக கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்பதே சந்தேகமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமியின் காலில், ஏன் அருள் விழுந்தார்? என்பதே அந்த டவுட்.

காலில் விழுந்தார்

காலில் விழுந்தார்

இப்படித்தான், சில தினங்களுக்கு முன்பு, டாஸ்மாக் கடையை மூடும்படி அங்கிருந்த ஊழியர்கள் காலில் அருள் விழுந்தார்.. ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டி பகுதியில் அரசு டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது... அதிக குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் அரசு பள்ளி, வார சந்தை அம்மா பூங்கா, உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.. இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 7ம் தேதி, பொதுமக்களை ஒன்று திரட்டி அருள் போராட்டத்தில் ஈடுபட்டார்..

கெஞ்சினார்

கெஞ்சினார்

பிறகு, அந்த கடையை மூடுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், மதுக்கடையை இனியும் திறக்க கூடாது என்றும் அரசு மதுபான கடை ஊழியர்களிடம் அருள் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், டாஸ்மாக் கடையை மூடுமாறு, கடை ஊழியர்களின் காலிலும் விழுந்து கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. இந்நிலையில், எடப்பாடி காலில் விழுந்துள்ளார்.. இது எதற்கு என்றுதான் தெரியவில்லை.

 சிந்தாமல் சிதறாமல்

சிந்தாமல் சிதறாமல்

பொதுவாக, கூட்டணியை சேர்ந்தவர்கள், கூட்டணி தலைவருக்கு வணக்கம் சொல்லியோ அல்லது கைகுலுக்கியோ தங்கள் மரியாதையை செலுத்துவது வழக்கம்.. ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும், மரியாதையை காலில் விழுந்துதான் செலுத்த வேண்டுமா? என்பதே கேள்வியாக எழுந்துள்ளது. வன்னியர் சமூக வாக்குகளை அதிமுக பக்கம் திருப்பி விடும் வேலையில் சமீப காலமாகவே ஏவி ராஜூ செயல்பட்டு வரும்போது, அருளின் இந்த செயல் பலவித சந்தேகங்களை கிளப்பி விட்டு வருகிறது.. ஒருவேளை சொந்த தொகுதி தலைவர் என்பதால், எடப்பாடியின் காலில் அருள் விழுந்தாரா? அல்லது அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது என்று சொல்ல வருகிறாரா? அல்லது அதிமுக பக்கம் அருள் செல்ல போகிறாரா? எதுவுமே தெரியவில்லையே.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+