திடீரென சிலுவம்பாளையம் கோவிலுக்கு போன எடப்பாடி பழனிசாமி.. ‘கண்ணை மூடி’ - ஜோதிடர்கள் அறிவுரை காரணமா?
சேலம் : அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தனக்கு எதிராக வந்த நிலையில், தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நீதிமன்ற தீர்ப்பு தனக்கு எதிராக வந்த நிலையில், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த கையோடு சேலம் கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி சேலத்தில் முகாமிட்டு, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், நேற்று திடீரென தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு காரை விட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில ஜோதிடர்கள் சொன்னதன் அடிப்படையிலேயே, சொந்த ஊருக்குச் சென்று முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்ததாகவும், தனது வேண்டுதல் நிறைவேறினால், மீண்டும் வந்து கோவிலுக்கு காணிக்கை வழங்குவதாவும் ஈபிஎஸ் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் சென்ற ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அவர் வகித்து வந்த இடைக்கால பொதுச் செயலாளர் பதவியும் தானாகவே காலாவதியானது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இத்தகைய பெரும் பரபரப்புகளுக்கு இடையே, எடப்பாடி பழனிசாமி ஓரிரு நாட்களுக்கு முன்பு சேலம் சென்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுக்குழு வழக்கில் பின்னடைவு
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம்வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர வேண்டும், பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார்.

சொந்த ஊர்களுக்குச் சென்ற தலைகள்
பொதுக்குழு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், அங்கு தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசித்து வருகிறார். ஈபிஎஸ் பக்கம் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலைகளிலும் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டு வருகிறது. ஈபிஎஸ் தரப்பு அமைதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறது.

அதிகாலையில் வந்த எடப்பாடி
பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்த ஈபிஎஸ், சென்னையில் இருந்து கார் மூலம் அதிகாலையில் சேலம் வந்தார். சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த அவருக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என அதிமுக நிர்வாகிகள் திரளாக காத்திருந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவாளர்கள், சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரது வீட்டில், முக்கிய நிர்வாகிகள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, தனது நம்பிக்கைக்குரிய ஜோதிடர்கள் சிலரின் கருத்தையும் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஜோதிடர் அட்வைஸ்
வெற்றி மீது வெற்றி வந்தபோதே, சில வேண்டுதல்களை நிறைவேற்றி இருக்க வேண்டும். அதைத் தவற விட்டதால் தான் இந்த சிறு பின்னடைவு, இதுவும் பனி போல விலகும். சொந்த மண்ணுக்குப் போய் தெய்வங்களைப் பாருங்கள், நல்ல வழி பிறக்கும் என நம்பிக்கைக்குரிய ஜோதிடர் ஒருவர் ஆலோசனை கூறினாராம்.

சிலுவம்பாளையத்திற்கு பறந்த வண்டி
இதையடுத்து, நேற்று நெடுஞ்சாலையில் இருந்து சிலுவம்பாளையத்திற்குப் பறந்தது எடப்பாடி பழனிசாமியின் வண்டி. சொந்த கிராமத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலுவம்பாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட அங்குள்ள பல்வேறு கோவில்களில் மனமுருகி சாமி தரிசனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

நம்பிக்கையுடன்
சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள கோவில்களில் மனமுருகி வேண்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தனது வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு மீண்டும் வருவதாக உறுதியளித்துவிட்டுச் சென்றுள்ளாராம். மேலும், தனது சொந்த கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டு மனுக்களையும் பெற்றுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications