இவர் தான் சேலம் ராதா.. பார்க்க அப்பாவி போல் நடித்து.. தமிழ்நாடே தேடும் கேடித்தனம்.. மிரண்ட போலீஸ்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நகைக்கடையில் போலி நகையை கழற்றி வைத்துவிட்டு, 7½ பவுன் தங்க சங்கிலியை லாவகமாக திருடி சென்ற பெண்ணை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.
திருடுவோரை கண்டுபிடிக்க என்னதான் சிசிடிவி காட்சிகள், தெருவுக்கு தெரு கேமராக்கள், போலீஸ் கண்காணிப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு இருந்தாலும், திருடும் கூட்டம் திருடிக் கொண்டுதான் இருக்கிறது.

மக்கள் அசந்த நேரத்தில் பிட்பாக்கெட் அடிக்கும் கும்பல், லாவகமாக நகைகளையும் கூட்டத்தில் திருடுகின்றன. தமிழ்நாட்டின எந்த பேருந்து நிலையங்களுக்கு சென்றாலும் போட்டோக்களை மாற்றி, இவர்கள் வருவார்கள்.. ஜாக்கிரத்தையாக இருங்கள் மக்களே.. கண் அசரும் நேரத்தில் திருடுவார்கள் என்று கூறி பதாகை வைத்திருப்பார்கள். ஆனாலும் திருடுவதை சர்வ சாதாரணமாக மேற்கொள்ளும் கும்பல் சிசிடிவி காட்சிகளில் கூட மண்ணை அள்ளிப்போட பல வேலைகளை செய்கிறது. அதேநேரம் என்ன தான் திருடி தப்பித்தாலும் ஒரு நாள் அந்த கும்பல் போலீசிடம் சிக்கி கொள்கிறது.
திருடுவதில் சில ஆண்கள் மட்டுமல்ல.. சில பெண்களுமே சர்வ சாதாரணமாக வித்தகர்களாக இருக்கிறார்கள். பார்க்க அப்பாவி போல் இருக்கும் சில பெண்கள், கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.. அப்படி கம்பி நீட்டிய ஒரு பெண்ணைதான் சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் தனியார் நகைக்கடைக்கு பர்தா அணிந்து சென்றுள்ளார் பெண் ஒருவர். அவர் போலி நகைகளை கழற்றி கொடுத்து விட்டு 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர்.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பர்தா அணிந்து வந்த பெண், சீலநாயக்கன்பட்டி மதுரை வீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மதன் மனைவி ராதா (வயது 35) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதேபாணியில் பர்தா அணிந்து நகைகளை திருடி வந்திருக்கிறார். அதுதொடர்பாக பல்வேற போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கைதான ராதாவை வாழப்பாடி போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications