சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாய்லெட் நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட 'பீர்'.. செம டேஸ்ட்டாம்! முண்டியடித்து கொண்டு வாங்கும் மக்கள்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பீர் வகை பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் புதிய பீர் வகை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தேசிய நீர் அமைப்பான PUB உடன் இணைந்து Brewerkz என்ற உள்ளூர் நிறுவனம் இதைத் தயாரித்து உள்ளது.

நீண்ட ஆய்வு, பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகளுக்குப் பின்னரே இந்த புதிய வகை பீர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பீருக்கு ஏன் இவ்வளவு பில்டப் எனக் கேட்கிறீர்களா!

சிறுநீரில் இருந்து பீர்.. விவேக் சொன்ன மாதிரி தனி ருசியா இருக்குமோ..குடிச்சுப்பாருங்க சிறுநீரில் இருந்து பீர்.. விவேக் சொன்ன மாதிரி தனி ருசியா இருக்குமோ..குடிச்சுப்பாருங்க

 பீர்

பீர்

"NEWBrew" என்று அழைக்கப்படும் இந்த பீர் சாதாரணமானது இல்லை. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நீர் மாநாட்டில் முதல்முறையாக இந்த பீர் வகை அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் சற்று தாமதத்திற்குப் பின்னர் இந்த வகை பீர் இப்போது சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பீரை சிங்கப்பூர் நாட்டில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் பெறலாம்.

 டாய்லெட் நீர்

டாய்லெட் நீர்

இந்த பீரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது மறுசுழற்சி செய்யப்பட்ட டாய்லெட் நீரில் இருந்து செய்யப்பட்டது. இது தான் இந்த பீரை தனித்துக் காட்டுகிறது. சிங்கப்பூர் நாட்டின் நீர் பாதுகாப்பை மேம்படுத்தக் கடந்த 2003ஆம் ஆண்டில் கழிவு நீர் மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி மறுசூழற்சியில் இருந்து பெறப்படும் NEWBrew நீரைக் கொண்டு தான் இந்த புதிய NEWBrew பீர் செய்யப்படுகிறது.

 நீர் பற்றாக்குறை

நீர் பற்றாக்குறை

நிலையான நீர் பயன்பாடு மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தைச் சிங்கப்பூர் மக்களுக்கு உணர்த்தும் முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. கழிவுநீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு முதலில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் கூட, கடந்த சில ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. உலகில் 2.7 பில்லியன் மக்கள் வருடத்திற்குக் குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், இத்திடத்தைச் சிங்கப்பூர் மக்கல் முக்கியமானதாக பார்க்கின்றனர்.

 மறுசுழற்சி

மறுசுழற்சி

இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நன்னீர் வளங்கள் குறைவாகவே இருக்கிறது. இதனால் மாற்றுத் திட்டங்களில் இந்த நாடுகளில் அதிகம் கவனம் செலுத்து வருகின்றன. புற ஊதா ஒளி மூலம் கழிவுநீரைக் கிருமி நீக்கம் செய்து, அசுத்தமான துகள்களை அகற்ற மேம்பட்ட ஜல்லடை போன்ற அமைப்புகளில் இவை செலுத்தப்படும். அதன் பின்னர் இதைக் குடித்தால் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் என யாராலும் கண்டறிய முடியாது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டன் போன்ற நகரங்கள் இத்திட்டங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றன.

 அமோக ஆதரவு

அமோக ஆதரவு

இந்த பீருக்கு தான் சிங்கப்பூர் மக்கள் வேறு லெவல் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே, முதல் பேட்ஜ் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். சில சூப்பர் மார்கெட்களில் ம்டடுமே இன்னும் அந்த வகை பீர் உள்ளன. அவையும் கூட ஓரிரு வாரங்களில் காலியாகிவிடும் என்றே சொல்லப்படுகிறது. இதனால், அடுத்த பேட்ஜ்ஜை தயாரிக்கும் நடவடிக்கையில் சம்மந்தப்பட்ட நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 காரணம் என்ன

காரணம் என்ன

பொதுவாக நீர் எடுக்கப்படும் இடத்தை பொறுத்து அதில் ரசாயனங்கள் இருக்கும். இதில் இருந்து மதுபானம் தயாரிக்கப்படும்போது, இடத்தை பொறுத்துச் சுவை மாறுபடும். அதேநேரம் சுத்திகரிக்கப்பட்ட நீரில் ரசாயனங்கள் எதுவும் இருக்காது. pH அளவில் சரியாக 7 இருக்கும். அதில் இருந்து பீர் தயாரிக்கப்படுவதாலேயே அது சுவையாக இருப்பதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

English summary
Singapore introduces new type of beer made with recycled sewage: (சிங்கப்பூர் நாட்டில் டாய்லெட்டில் இருந்து தயாரிக்கப்படும் வித்தியாசமான பீர்) Singapore govt latest on recyling sewage water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X