ரூ.4,00,000 லஞ்சம்.. சிங்கப்பூரில் வாலாட்டிய இந்திய ஊழியர்கள்.. இவ்வளவு லட்சம் அபராதமா? ப்பா போச்சே!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உணவு பொருட்கள் விநியோக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இரண்டு இந்தியர்கள் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களுக்கு தலா ரூ.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் சட்டவிரோதமானதாகும். பல்வேறு நாடுகளிலும் இது சட்டவிரோதமாக இருப்பினும் சில நாடுகளில் இது வெளிப்படையாகவே இருக்கிறது. இந்தியாவில் அரசு மருத்துவமனைகள் தொடங்கி வங்கிகள் வரை லஞ்சம் சம்பந்தமாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் கடந்த 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் அந்நாட்டு நீதிமன்றம் மேற்குறிப்பிட்டவாரு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் 'சொன்னமேரா' எனும் உணவு பொருட்கள் விநியோக நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த ரத்தினசவபதி கிடங்கு மேற்பார்வையாளராகவும், கணக்கு/நிர்வாக நிர்வாகி முரளிதரனும் பணியாற்றி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பணியிலிருந்து தங்களை விடுவித்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

திட்டம்
இதனால் அதிக அளவில் காலிப்பணியிடம் இருந்திருக்கிறது. எனவே ஆட்கள் தேவையென உணவு பொருட்கள் விநியோக நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இதனை பார்த்த இன்ஸ்பிரோ நிறுவனத்தின் அதிகாரிகள் தங்களர் சார்பாக ஆட்களை இந்த கடைக்கு அனுப்ப கேட்டுள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில், ரத்தினசவபதி இன்ஸ்பிரோவின் இயக்குநரான ஹேமா சுதன் நாயரை அணுகி ஒரு ஒப்பந்தம் பேசியிருக்கிறார். அதன்படி இன்ஸ்பிரோ நிறுவனத்தின் சார்பில் ஆட்கள் வரவேண்டும் எனில் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

லஞ்சம்
இவர் கேட்டதை போல ரூ.4.2 லட்சம் லஞ்ச தொகையாக ஹேமா சுதன் நாயர் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து இந்த விஷயத்தை முரளிதரனிடம் கூறி அவருக்கு ரூ.2.1 லட்சத்தை கொடுத்திருக்கிறார் ரத்தினசவபதி. இந்த விவகாரங்களை தடுத்து நிறுத்த வேண்டிய முரளிதரன் லஞ்சம் பெற்றுக்கொண்டு இன்ஸ்பிரோ நிறுவனத்தின் ஆட்களை நிர்வாகத்திடம் பரிந்துரைத்துள்ளார். தொடக்கத்தில் இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் ஒரு சில வாரங்களிலேயே விஷயம் 'சொன்னமேரா' நிர்வாகத்திற்கு கசிந்திருக்கிறது.

உத்தரவு
எனவே உடனடியாக இருவரையும் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. மட்டுமல்லாது இது தொடர்பாக இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகார் நீதிமன்றத்தில் விரிசாிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் ரத்தினசவபதி மற்றும் முரளிதரனுக்கு தலா ரூ.14 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது தாங்கள் பெற்ற லஞ்ச தொகையை சொன்னமேரா உணவு விநியோக நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிங்கப்பூரில் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டும் என தெரிந்தும் இரண்டு இந்தியர்கள் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டுள்ளது அந்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியா
இந்தியாவை பொறுத்த அளவில் சாதாரண லஞ்ச வழக்குகள் மற்றும் உயர்மட்ட லஞ்ச வழக்குகள் என இரண்டு வகையாக பிரித்து பார்கக்கப்படுகிறது. சாதாரண வழக்களில் மகாராஷ்ரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள்தான் முன்னிலையில் உள்ளதாக 2021ம் ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, உயர்மட்ட லஞ்ச வழக்குகளை பொறுத்த அளவில் கடந்த 6,700 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இதில் 275 வழக்குகளை சிபிஐ கடந்த 20 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications