இனி வெறும் அபராதம் மட்டுமல்ல.. ரோட்டிலேயே நடமாட முடியாது.. சிங்கப்பூர் கொண்டு வரும் புதிய ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது தான் டிமெரிட் பாயிண்ட். இப்போது அந்த வீதிகளை சிங்கப்பூர் மேலும் கடுமையாகவும் மாற்றியுள்ளது. அதென்ன டிமெரிட் பாயிண்ட்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் சாலை விபத்துகளை குறைக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் டிரைவர் இம்ரூவ்மெண்ட் பாயிண்ட் சிஸ்டம் எனப்படும் டிமெரிட் பாயிண்ட் முறையை பின்பற்றி வருகிறது. இந்த முறையை மேலும் கடுமையாக்கி சில புதிய விதிகளை சிங்கப்பூர் அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் அடுத்தாண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரவுள்ளன.

Singapore India traffic

டிமெரிட் பாயிண்ட் என்றால் என்ன?

சாலையில் நாம் செல்லும்போது சாலை விதிகளை மதிக்காமல் மீறினால் நமக்கு டிமெரிட் பாயிண்ட் வழங்கப்படும். அதாவது நம்ம ஊரில் அபராதம் செலுத்திவிட்டு எஸ்கேப் ஆகலாம். ஆனால், சிங்கப்பூரில் அபராதத்தோடு டிமெரிட் பாயிண்ட்டும் வழங்கப்படும். எனவே, நீங்கள் செய்யும் தவறு அன்றோடு முடிந்துவிடாது. அதற்கான டிமெரிட் பாயிண்ட் உங்களுடனேயே தொடரும். குறிப்பிட்ட டிமெரிட் பாயிண்ட் பெற்றால் உங்கள் லைசென்ஸ் தற்காலிகமாக முடக்கப்படும்.

என்ன நடக்கும்?

தற்போது உள்ள விதிகளின்படி ஓட்டுநர்கள் 24 மாதங்களில் 24 டிமெரிட் பாயிண்ட்கள் பெற்றால் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும். ஆனால், புதிய விதிகளின்படி இது 18 பாயிண்ட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 24 மாதங்களுக்குள் 18 பாயிண்ட்கள் கிடைத்தாலே ஓட்டுநர் உரிமம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படும். ஏற்கனவே லைசன்ஸ் முடக்கப்பட்டு, அது முடிந்து சைலென்ஸ் பெற்றோர் புரொபேஷன் டிவைர்கள் என அழைக்கப்படுவார்கள். தற்போதைய விதிகளின்படி இந்த புரொபேஷன் டிரைவர்களுக்கு 13 பாயிண்ட்கள் வரை அனுமதி உள்ளது. ஆனால், அடுத்தாண்டு முதல் இது 12ஆக குறைக்கப்படுமாம்.

டிமெரிட் பாயிண்ட்கள்

சில மிக கடுமையான விதிமீறல்களுக்கு ஒரே நேரத்தில் 18 டிமெரிட் பாயிண்ட்கள் கூட வழங்கப்படும். உதாரணமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் 50கிமீ வேகமாக வாகனத்தை ஓட்டுவது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்கு நேரடியாக 18 பாயிண்ட்கள் வழங்கப்படலாம். இதனால் முதல் விதிமீறலிலேயே ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும்.

புதிய விதிகளின்படி லைசன்ஸ் முடக்கப்படும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி முதல் முறை டிமெரிட் பாயிண்ட்கள் பெற்றால் 12 வாரங்கள் லைசன்ஸ் முடக்கப்படும். அது இப்போது 4 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை டிமெரிட் பாயிண்ட்டை மீறினால்.. இப்போது 24 வாரங்கள் முடக்கப்படும் சூழலில், அது 6 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறை அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரையிலும் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகள் வரை ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும்.

போலீஸ் டிரைனிங்

அதேநேரம் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிரைவர்கள் போக்குவரத்து போலீசார் நடத்தும் 1½ நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியை முடித்தால், சில குறிப்பிட்ட டிரைவர்களுக்கு சஸ்பென்ஷன் அளவு குறையும்!

சிங்கப்பூர் நாட்டில் குற்றங்கள் பொதுவாகவே மிக குறைவாகவே நடக்கும். அதற்கு அங்குள்ள குடிமக்கள் பொறுப்பாக இருப்பது ஒரு காரணம் என்றால் இதுபோல மிக கடுமையான தண்டனைகள் இருப்பதும் இன்னொரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+