இந்தியர்களுக்கு தான் சிக்கல்! சிங்கப்பூர் போட்ட உத்தரவு! இனி சின்ன விஷயத்துல கூட தப்பு இருக்க கூடாது
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டு அரசு முக்கியமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாகச் சிங்கப்பூருக்கு விமானம் ஏறும் முன்பே ஒருவர் தடுத்து நிறுத்தப்படலாம். அது என்ன உத்தரவு.. இதில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இப்போது இந்தியப் பயணிகளுக்கு வெளிநாட்டுப் பயணம் முன்பைவிட எளிதாகிவிட்டது. ஒரு 10 நாள் லீவு கிடைத்தாலும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பழக்கம் அதிகரித்துவிட்டது. அப்படி இந்தியர்கள் விரும்பி செல்லும் வெளிநாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் சிங்கப்பூருக்கு செல்கிறார்கள்.

சிங்கப்பூர்
ஆனால், கடந்த ஜனவரி 30ம் முதல் சிங்கப்பூர் பயணம் செய்வோர் ஒரு கூடுதல் சோதனையை எதிர்கொள்ள நேரிடும். இது நீங்கள் சிங்கப்பூர் செல்ல விமானம் ஏறுவதற்கு முன்பே ஆரம்பித்துவிடும். சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனை ஆணையம் NBD எனப்படும் "பயணம் தடை உத்தரவு" (No-Boarding Directive) முறையை அறிமுகப்படுத்தியதே இதற்குக் காரணம்.
இதன் மூலம் சிங்கப்பூரில் நுழையத் தகுதி பெறாத பயணிகளை, அவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்த முடியும். அதாவது ஒருவர் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருக்கிறார் என்றால் அவரிடம் உரிய டாக்குமென்ட் இல்லை என்று சிங்கப்பூர் அரசு கருதினால்.. அவர் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் செக்-இன் கவுன்டரிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்.
அதிகாரம்
சிங்கப்பூருக்கு வரத் தகுதி பெறாத பயணிகளை ஏர்போர்ட்டிலேயே தடுத்து நிறுவனம் அதிகாரத்தையே இந்த என்பிடி விமான நிறுவனங்களுக்கு வழங்குகிறது. சாங்கி விமான நிலையம் மற்றும் செலட்டர் விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
அதாவது சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் குறித்த விவரங்களை ஏர்லைன்கள் சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பும். ஒரு பயணியைத் தகுதியற்றவராகவோ அல்லது அதிக ஆபத்துள்ளவராகவோ சிங்கப்பூர் ஐ.சி.ஏ கருதினால், அவரை தடுத்து நிறுத்துமாறு உத்தரவு நேரடியாக விமான நிறுவனத்திற்கு அனுப்பப்படும். ஒருமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்தப் பயணியை விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்காது. முன்பு, இதுபோன்ற சோதனை சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கிய பிறகே மேற்கொள்ளப்படும். இப்போது இந்த செயல்முறை புறப்படும் விமான நிலையத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.
என்ன நடக்கும்
பயணிகளின் தகவல்களை, அதாவது விமானப் பயணிகள் பட்டியல், சிங்கப்பூர் வருகை அட்டை (SG Arrival Card) விவரங்கள், பாஸ்போர்ட் மற்றும் விசா தரவுகள், கடந்த காலக் குடிவரவு அல்லது பாதுகாப்பு தொடர்பான தடைகள் குறித்த விவரங்களை விமான நிறுவனங்கள் சிங்கப்பூரின் ஐ.சி.ஏ-வுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவற்றை விமானம் கிளம்பும் முன்பே ஐ.சி.ஏ ஆய்வு செய்யும். எதாவது சிக்கல் கண்டறியப்பட்டால் உடனடியாகத் தடுத்து நிறுத்த உத்தரவிடப்படும். அதேபோல எதாவது சந்தேகம் இருந்தாலும் கூடக் கூடுதல் சோதனை செய்யவும் உத்தரவிடப்படும்.
சரியான விசா இல்லாதது, ஆறு மாதங்களுக்கும் குறைவாகச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உடன் பயணிப்பது, பிழையான அல்லது விடுபட்ட சிங்கப்பூர் வருகை அட்டை சமர்ப்பிப்பது உள்ளிட்ட காரணங்களால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அத்துடன், முந்தைய பயணத்தின்போது ஏற்பட்ட சிக்கல்கள், தடை செய்யப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டோரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறிய ஆவணப் பிழைகளால் கூட உங்கள் சிங்கப்பூர் பயணம் தடைபடலாம்!
இந்தியர்களே கவனம்
சிங்கப்பூருக்குச் செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்தியர்களும் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும். விமானத்தில் புறப்படும் முன், தங்கள் பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதக் காலம் வேலிடிட்டியை கொண்டுள்ளது, விசாக்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிப்பது, சிங்கப்பூர் வருகை அட்டையைத் துல்லியமாக நிரப்பிச் சமர்ப்பிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரம் ஒரு முறை தடை வந்தால் அது நிரந்தரத் தடை என்று அர்த்தமல்ல. தங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தவறானது எனப் பயணிகள் கருதினால் கடிதம் மூலம் ஒப்புதலைப் பெற விண்ணப்பிக்கலாம். அனுமதி கிடைத்த பின்னர் மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்லலாம்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications