• search
சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"அண்ணியுடன்" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்

|

சிவங்கை: அண்ணியுடன் கணவன் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்டு, புழுவாய் துடித்துபோய்விட்டார் புதுமணப்பெண் கவுசல்யா.. வெறும் 19 வயசுதான்.. இறுதியில் அநியாயமாக கவுசல்யாவின் உயிர் போய்விட்டது!

சிவகங்கை மாவட்டம் நன்னியாவூரைச் சேர்ந்தவர்தான் கவுசல்யா.. 19 வயது பெண்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாகவயல் என்ற கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜுக்கு கவுசல்யாவை அவரது வீட்டில் கல்யாணம் செய்து தந்தனர்.

பாக்யராஜுக்கோ வயசு 32 ஆகிறது.. கடந்த ஜூலை மாதம்தான் கல்யாணம் நடந்துள்ளது.. பல கனவுகளுடன் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தார் கவுசல்யா.. ஆர்எஸ் மங்கலம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் குடியேறினர்.

சிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்

சடலம்

சடலம்

இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி கவுசல்யா வீட்டில் சடலமாக கிடந்தார்.. அப்போது வீட்டில் யாருமே இல்லை.. பாக்கியராஜ் வெளியூருக்கு சென்றுவிட்டார்.. தூக்கில் தொங்கி கொண்டிருந்த கவுசல்யாவின் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் எட்டியது.. விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டனர்.. கவுசல்யாவின் கை, காலெல்லாம் ரத்தம் வழிந்து கிடந்தது.. அந்த ரத்தம் வீட்டின் சுவற்றிலும் தெறித்து விழுந்திருந்தது.

விசாரணை

விசாரணை

பலவித சந்தேகங்களை கவுசல்யாவின் மரணம் ஏற்படுத்தியது.. கணவனும் இந்த நேரத்தில் ஊரில் இல்லை.. அதனால் இது கொலையா? தற்கொலையா என்ற ரீதியில் விசாரணையும் துரிதமானது.. கிட்டத்தட்ட கவுசல்யா இறந்து ஒன்றரை மாசம் கழித்துதான் உண்மை அம்பலமானது.. இதில் சம்பந்தப்பட்டவர் பாக்கியராஜும், அவரது அண்ணி ஜோதியும்தான்.

 சந்தேகம்

சந்தேகம்

பாக்கியராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.. அதனால் ஜோதி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் கணவன் வீட்டில் வசித்து வருகிறார்... அதேவீட்டில்தான் கல்யாணமாகாத பாக்கியராஜும் இருந்திருக்கிறார்.. இவர்களுக்குள் நெருக்கம் இருந்திருக்கிறது.. கவுசல்யா கல்யாணம் ஆகி, இந்த வீட்டுக்குள்தான் வந்தார். ஒருநாள் இந்த கள்ள ஜோடி ஒன்றாக இருப்பதை கவுசல்யா கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ந்துபோனார்.

 வரதட்சணை

வரதட்சணை

கதறி கதறி அழுதார்.. கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு, கல்யாணத்துக்கு முன்பே உறவு இருந்தது,அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட முடியாது என்று அசால்ட்டாக சொன்னார். இதுதான் தம்பதிக்குள் தகராறாக தினம்தோறும் வந்துள்ளது.. தன்னுடைய தவறை மறைக்க, வரதட்சணை பிரச்சனையை கிளப்பினார் பாக்கியராஜ்.

ரத்தம்

ரத்தம்

மீதி தர வேண்டிய நகையை வாங்கி வரும்படி, கவுசல்யாவை அவரது அம்மா வீட்டிற்கு திட்டி அனுப்பி வைத்துவிடுவார்... இதையெல்லாம் பார்த்துதான் 19 வயது கவுசல்யா நொந்து போனார்.. கடுமையான மனஉளைச்சலுக்குள்ளான கவுசல்யா, தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.. அதனால் கத்தியால் கைகளை அறுத்து கொண்டார்.. ரத்தம் கொட்டியதே தவிர, உயிர் போகவில்லை.

 கள்ளஜோடி

கள்ளஜோடி

அதனால் ஃபேனில் தூக்கு போட்டுக் கொண்டு தொங்கிவிட்டார்.. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ஆர்எஸ் மங்கலம் போலீசார் அந்த கள்ளஜோடியை கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள். கல்யாணம் ஆன 2 மாசத்தில் ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோனதும், ஒன்றரை மாதம் கழித்து இந்த மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளதும் சிவகங்கையில் பரபரப்பை தந்து வருகிறது.

 
 
 
English summary
19 year old girl committed suicide in near Sivagangai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X