• search
சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

D-வாரிசு, M-பணம், K-கட்ட பஞ்சாயத்து.. கருணாநிதி > ஸ்டாலின் > அவரது மகன் - காரைக்குடியில் சாடிய நட்டா

Google Oneindia Tamil News

சிவகங்கை: திமுக ஒரு குடும்ப கட்சி என்றும் திமுகவில் முன்பு கருணாநிதி இருந்தார், இப்போது ஸ்டாலின் வந்துள்ளார், அடுத்து அவரது மகன் வருவார் எனவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தார். அன்றில் இருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழ்நாடுக்கு வந்து சென்று இருக்கிறார். இதேபோல் கேரளா, தெலுங்கானாவுக்கு அமித்ஷா அண்மையில் சென்றார்.

பாஜக தேசிய தலைவருக்கே இப்படியா? எச்.ராஜா மொழிபெயர்க்க.. காரைக்குடியில் காத்து வாங்கிய “காலி” சேர்கள்பாஜக தேசிய தலைவருக்கே இப்படியா? எச்.ராஜா மொழிபெயர்க்க.. காரைக்குடியில் காத்து வாங்கிய “காலி” சேர்கள்

காரைக்குடி வந்த ஜே.பி.நட்டா

காரைக்குடி வந்த ஜே.பி.நட்டா

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வந்தார். சிவகங்கை மாவட்டத்தில் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், மாலை காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

வேட்டி சட்டை

வேட்டி சட்டை

இந்த நிகழ்வில் தமிழர் பாரம்பரியப்படி வேட்டி, சட்டை, துண்டு போட்டு அவர் இதில் கலந்துகொண்டார். விழாவில் பாரத் மாதா கி ஜே, வெற்றி வேல், வீரவேல் என முழக்கமிட்டு அவர் தனது உரையை தொடங்கினார். "இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கையில் ஒரு தெளிவான உண்மை எனக்கு தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தாமரை மலரப்போகிறது.

 வாரிசு கட்சிகள்

வாரிசு கட்சிகள்

பாஜக மட்டுமே அனைத்து இந்திய கட்சி. பாஜக மட்டுமே கொள்கை உள்ள கட்சி. மற்ற கட்சிகள் சுருங்கிவிட்டன. கொள்கை இல்லாத கட்சிகளுடம் சண்டையிடவில்லை. பிராந்திய கட்சிகள் தற்போது வாரிசு கட்சிகளாக சுருங்கிவிட்டன. பிடிபி, என்சிபி, அகாலி தளம், சமாஜ்வாடி, திரிணாமூல், முக்தி மோர்சா, ஒடிசா, ஒய்.எஸ்.ஆர்., டி.ஆர்.எஸ்., திமுக ஆகியவை குடும்ப கட்சிகள்.

கருணாநிதி குடும்பம்

கருணாநிதி குடும்பம்


திமுகவில் முன்பு கருணாநிதி இருந்தார். இப்போது ஸ்டாலின் வந்துள்ளார். அடுத்து அவரது மகன் வருவார். இது என்ன மாதிரியான ஜனநாயகம்? ஸ்டாலினால் வளர்ச்சியை பற்றி பேச முடியுமா? DMK வில் D என்றால் Dyanasty (வாரிசு), M என்றால் Money (பணம்), K என்றால் கட்ட பஞ்சாயத்து. இதுதான் திமுக.

திமுக பெரிய பூஜ்ஜியம்

திமுக பெரிய பூஜ்ஜியம்

திமுகவால் பிராந்தியத்தை பற்றி பேச முடியுமா? நாங்கள்தான் தமிழ் மொழி பற்றி பேசுகிறோம்.அதை பாதுகாக்கிறோம். திமுகவின் பங்களிப்பு என்ன? திமுக வெறுப்பு அரசியலில் நம்பிக்கை வைத்து உள்ளது. திமுகவுக்கு பிளவுபடுத்துகிறது. திமுகவுக்கு எந்த குறிக்கோளும் இல்லை. கொள்கை ரீதியாக திமுக பெரிய பூஜ்ஜியம். உங்களின் கொள்கை எப்போது நாற்காலியை பற்றிதான்." என்றார்.

English summary
DMK is a family party and DMK had Karunanidhi earlier, now Stalin has come and his son will come next, BJP National President JP Natta has criticized DMK in a public meeting held in Karaikudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X