பாஜகவில் பாதுகாப்பில்லையா? ’போட்டோ' அனுப்ப சொன்ன ’காரைக்குடி’ தாமரை தலைவர்! மருத்துவமனையில் மகளிரணி
சிவகங்கை: 2026 சட்டசபை தேர்தலுக்கு பாஜக தலைமை தயாராகி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பாஜக. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடும் சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத் தலைவர் பாஜக மாவட்டத் தலைவர் பாண்டிதுரை, தன்னைச் சில புகைப்படங்களை அனுப்பச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாகவும், தொடர்ந்து மனரீதியான நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் தான் த**கொ** செய்து கொள்ளப் போவதாகவும் அக்கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவி ஆடியோ வெளியிட்டு விபரீத முடிவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ள ராஜேஸ்வரி உள்ளார். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காரைக்குடி கல்லூரி சாலையில் ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்ட அறிவிப்பு பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரின் படங்களும் இடம்பெற வேண்டும், கட்சிக்கான செலவுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற காரணங்களைக் கூறி மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தன்னை அடிக்கடி அழைத்து மன அழுத்தம் கொடுத்ததாக ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

சிவகங்கை பாஜக சர்ச்சை
இந்த தொடர்ச்சியான அழுத்தத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் தான் த**கொ** முயற்சிக்கு சென்றதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரி த**கொ**க்கு முயன்றதை வீட்டில் இருந்த குடும்பத்தினர் கவனித்து, உடனடியாக அறை கதவை உடைத்து காப்பாற்றியுள்ளனர். பின்னர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மகளிரணி நிர்வாகி
ராஜேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாண்டிதுரை மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் அரசியல் சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. இதற்கிடையில், யாதவர் சமூக அமைப்புகளைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் கடும் கண்டனங்களை வெளியிட்டு, மாவட்டத் தலைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக பாண்டிதுரை
இதனால் இந்த சம்பவம் சமூக மற்றும் அரசியல் ரீதியாக காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு சர்ச்சையாக, த**கொ** முயற்சிக்கு முன்பு ராஜேஸ்வரி மாநில மகளிரணி தலைவி கவிதாவுடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், மாவட்டத் தலைவர் தன்னை சில புகைப்படங்களை அனுப்புமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தொடர்ந்து மனரீதியான நெருக்கடி கொடுத்து வருவதாகவும் ராஜேஸ்வரி வேதனையுடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
காரைக்குடி அரசியல்
சம்பவத்தையடுத்து, பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா மற்றும் மண்டல தலைவர் லட்சுமிதேவி ஆகியோர் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பின் விவரங்கள் கட்சி மேலிடத்துக்கு அறிக்கையாக அனுப்பப்படும் என கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டத் தலைவர் மீது கட்சித் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பாஜகவினரிடையே எழுந்துள்ளது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications