முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல மரங்களைக்காக்க மனது வைப்பாரா முதல்வர் மு.க ஸ்டாலின்
அரசு அலுவலகங்களிலும், சாலை ஓரங்களிலும் உள்ள நூற்றாண்டுகால மரங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மரங்களைக் காக்க ஆணையிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை: அரசு அலுவலகங்களிலும், சாலை ஓரங்களிலும் உள்ள நூற்றாண்டுகால மரங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் மரங்களைக் காக்க ஆணையிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நூற்றாண்டு கால மரம் விழுந்து பெண் காவலர் கவிதா மரணமடைந்தார். இந்த சம்பவம் பலரது மனதை பாதித்துள்ளது. இதுபோல அரசு அலுவலகங்கள், சாலையோரங்களில் இருக்கும் மரங்கள், மழை, புயல், வெள்ளத்திற்கு சாய்ந்து விழுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற நூற்றாண்டு பழமையான மரங்களைப்பாதுகாக்க சமூக ஆர்வலரும் எண் கணித நிபுணருமான ஜெஎன்எஸ் செல்வன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். அதன்படி நிழல்தரும் பயனுள்ள மரங்களைப் பாதுகாக்க புதிய ஆலோசனை ஒன்றினை கோரிக்கையாக அனுப்பியுள்ளார்.
வனத்துறை அலுவலகர்கள் மூலம் பழமையான மரங்களை கணக்கெடுப்பு நடத்தி அதை பாதுகாக்க சிமெண்ட் தொட்டி போல கட்டி தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் மரங்களை பாதுகாக்கும் முயற்சியை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், சாலையோரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாக்க தானே முன்வருவதாகவும் ஜெஎன்எஸ் செல்வன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல தமிழகம் முழுவதும் உள்ள மரங்களைக் கணக்கெடுப்பு நடத்தி பாதுகாக்க முயற்சி செய்தால் பிரபஞ்ச சக்தியின் ஆசி கிடைக்கும் என்றும் மழை காலங்களில் மரங்களினால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படும் என்றும் ஜெஎன்எஸ் செல்வன் தெரிவித்துள்ளார். மரம்காப்போம் மகிழ்வடைவோம் என்ற இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு வருமானமும் வருவதற்கான வழிமுறையினையும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஜெஎன்எஸ் செல்வன். இது தொடர்பாக பல ஆலோசனைகளைத் தரத் தயாராக இருக்கிறார். இவர் ராணி வேலுநாச்சியார் அவர்களின் வழித்தோன்றலாகும். மரங்களைக் காக்க முதல்வர் ஸ்டாலின் மனது வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications