சிவகங்கையில்.. எதிர்ப்புகளுக்கு மத்தியில்.. கொடி பறக்க விடத் தயாராகும் கார்த்தி சிதம்பரம்
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் தான் போட்டியிடுவதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு கிளம்பினாலும் கூட இந்த முறை எப்படியும் சிவகங்கையில் வெற்றிக் கொடி நாட்டி விட வேண்டும் என்று மும்முரமாக தயாராகி வருகிறார் கார்த்தி சிதம்பரம்.
சிவகங்கை தொகுதியில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர் ப.சிதம்பரம். கடந்த 2014 தேர்தலில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். நான்காவது இடமே அவருக்குக் கிடைத்தது. 3வது இடத்தைப் பிடித்தார் பாஜகவின் எச். ராஜா. இப்போது இந்த இருவரும் மீண்டும் தேர்தல் களத்தில் சந்திக்கின்றனர்.

இந்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என்ற முஸ்தீபுகளவுடன் களம் காண்கிறார் கார்த்தி சிதம்பரம். காரணம், இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் இங்கு அதிமுக வென்றது. திமுக 2வது இடம் பிடித்தது. எனவே நிச்சயம் இந்த முறை வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன் கார்த்தி சிதம்பரம் உள்ளார்.
அதேசமயம், அதிமுக துணையுடன் எப்படியவது ஜெயித்து விட வேண்டும் என்ற வேகத்தில் எச். ராஜாவும் உள்ளார். எனவே மோதல் சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது.
கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சிக்குள்ளேயே அதிருப்தி எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. ஆனால் அதிருப்திக் குரல்களை சரிக்கட்டும் வேலைகள் நடந்து வருவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இந்த நிலையில் தனது பிரச்சாரத்தை திட்டமிட்டு பக்காவாக ரெடியாகி விட்டாராம் கார்த்தி சிதம்பரம். அவரது காரைப் பார்ததாலே கலக்கலாக இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் அத்தனை கொடிகளையும் மொத்தமாக இடம் பெற வைத்து தயாராகி விட்டார் கார்த்தி சிதம்பரம்.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதையும் தாண்டி சிவகங்கை சீமையில் கார்த்தி சிதம்பரம் கொடி பறக்குமா.. புதிய அத்தியாயம் பிறக்குமா.. வழக்கம் போல பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications