இந்தியா வேகமாக வளர்கிறது.. மத்திய அரசை விமர்சிக்க ப.சிதம்பரத்திற்கு தகுதி இல்லை.. எச்.ராஜா பேச்சு!
சிவகங்கை: பொருளாதார ரீதியாக மத்திய அரசை விமர்சிக்க முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தகுதி இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
Recommended Video
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா விண்வெளி அமைப்பு வெளியிட்டது. அதனை உலகமே கொண்டாடி வரும் வருகிறது. அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ட்விட்டரில் படங்களுடன் வெளியிட்ட செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்தார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பணவீக்கம் 7.01 சதவிகிதமாகவும், வேலையில்லா திண்டாட்டம் 7.8 சதவிகிதமாகவும் பதிவாகியிருக்கும் நாளன்று மத்திய நிதியமைச்சர் வியாழன், புளூட்டோ, யுரேனஸின் படங்களை ட்வீட் செய்ததில் ஆச்சர்யமில்லை.
நிதியமைச்சர் தன்னுடைய சொந்தத் திறமைகள் மற்றும் தன் பொருளாதார ஆலோசகர்களின் திறமைகள் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கக் கிரகங்களை துணைக்கு அழைக்கலாம். அதற்கு முன்பு அவர் ஒரு புதிய தலைமை பொருளாதார ஜோதிடரை நியமிக்கலாம் என்று கிண்டல் செய்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவதிப்பு, பொருளாதார கொள்கை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் குறித்து பாஜக மீது ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்திற்கு தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய எச்.ராஜா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல் நொறுங்கி போயுள்ளன. சீனாவிலும் தொழில் உற்பத்தி வளர்ச்சி 0.4% மட்டுமே உயர்ந்துள்ளது. உற்பத்தி நாடான சீனாவே பொருளாதார பிரச்னையை சந்தித்து வருகிறது.
இதற்கு காரணம் கொரோனா வைரஸ் பரவல் தான். சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால், சர்வதேச அளவில் பொருளாதார பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இருந்தும், மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. பொருளாதாரம் குறித்து மத்திய அரசை விமர்சிப்பதற்கு ப.சிதம்பரத்திற்கு தகுதி இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications