ஜல்லிக்கட்டு..வாடி வாசலில் பாய தயாராகும் செந்தில் தொண்டமானின் கேஜிஎப்,டைகர்..களத்தில் மிரட்டுமா?
சிவகங்கை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராகி வருகின்றன. இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் வளர்க்கும் காளைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் ஃபேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் செந்தில் தொண்டமான். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகள் இறங்கினாலே எதிர்பார்ப்புகள் கூடும். இந்தக் காளைகள் ஒவ்வொன்றும் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டுவதுடன், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழும்.

ஏ.சி கேரவன், ஆரோக்கியமான உணவுகள் என இந்த வீரமிகு காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்துப் பராமரித்து வருகிறார் செந்தில் தொண்டமான். இலங்கையில் இரண்டு முறை அமைச்சர், ஒருமுறை உவா மாகாணத்தின் முதல்வர், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளி மாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார். இப்படி வளரும் இவரது காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வரை நடைபெற்ற எல்லா ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து சிவகங்கை சீமையின் வீரத்தை பறை சாற்றி வருகிறது. களத்தில் கொம்புகளையும், உடல் கம்பீரத்தையும் பார்த்ததும் பின்வாங்கச் செய்யும் "பேட்டகாளி, சோழன், அணில், கரிசல் ,கரிகாலன், புல்லட் ", போன்ற இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயரும் உண்டு.

வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை கொண்டவை. பெருத்த திமில், கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் தனது காளைகள் களத்தில் வீரர்களை மிரள வைக்கும் தனி சிறப்பு கொண்டவை என்கிறார் செந்தில் தொண்டமான். பல போட்டிகளில் முதல்பரிசான கார் வென்று பெருமை சேர்த்துள்ளன ஜல்லிக்கட்டு காளைகள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளதால் உற்சாகத்துடன் தனது முகநூல் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு காத்திருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக பயிற்சி அளித்து வரும் செந்தில் தொண்டமான் காளைகள் எப்படி தயாராகின்றன என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக எனது தோட்டத்திலேயே வாடிவாசல் ஏற்பாடு செய்து அதன் வழியாக பாய்ந்தோட பயிற்சி வழங்குதல், சிறிப்பாய மணற்மேடுகளை முட்டுதல், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தனி பயிற்சி வழங்கி வருவதோடு,உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருட்களை வழங்குகின்றோம். மேலும் காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் ஃபேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது என்று பெருமிதத்தோடு கூறினார்.
இந்த ஆண்டு பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலிருந்து கேஜிஎப் என்ற காளையையும், வனப்பகுதியில் புலியை துரத்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய
மற்றொரு காளையையும் வாங்கி வந்து அதற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி வழங்கி வருகிறோம். இவ்விரண்டு காளைகளுக்கும் கேஜிஎப், டைகர் என்று பெயர் வைத்துள்ளோம். இவ்விரண்டு காளைகளும் வர இருக்கின்ற போட்டிகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செந்தில் தொண்டமான் இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளை விட இந்தியா அதிகம் உதவிகள் செய்துள்ளது. இதனால் இலங்கை - இந்திய உறவு மேலும் பலப்பட்டுள்ளது.
உள்நாட்டு போருக்கு பிறகு இலங்கை அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா அதிக அளவு முதலீடு செய்தது. சீனாவிற்கு அதிகளவு வட்டி கட்ட வேண்டி இருந்த காரணத்தினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது.

இந்திய பிரதமர் மோடி செய்த நிதியுதவியால் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக முதல்வரும் உணவுப் பொருட்கள் அனுப்பி உதவினார். மற்ற நாடுகள் உதவி செய்யாதபோது இந்தியா உதவிக்கரம் நீட்டியது பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் இலங்கை நிதி உதவியை எதிர்பார்த்துள்ளது. உதவி கிடைக்கும் பட்சத்தில், ஓரிரண்டு ஆண்டுகளில் இலங்கை பழைய நிலைமையை அடையும்.
எல்லை தாண்டி வரும் மீனவர்களைத்தான் இலங்கை கடற்படை கைது செய்கிறது. மேலும் அவர்களை உடனுக்குடன் விடுவித்து வருகிறது. ஆனால் கடத்தல், சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை சட்டப்படி நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும் அல்லது 2 நாடுகளின் பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம். மீன்பிடி எல்லை பிரச்சினையை தீர்ப்பது, இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளது என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications