ஆறே வார்த்தையில் கம்பீர் போட்ட ட்வீட்! இப்போ இதுதான் டிரெண்டிங்! அவளோதான் முடிச்சு விட்டுடீங்க போங்க
டெல்லி: ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா அட்டகாசமான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்தியா 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இதற்கிடையே ஆசியக் கோப்பை வெற்றி தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் வெறும் ஆறே வார்த்தைகளில் ட்வீட் செய்திருக்கிறார். அவரது ட்வீட் இப்போது டிரெண்டாகி வருகிறது.
துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றியைப் பதிவு செய்தது.

கொண்டாடிய இந்தியா
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாரிஸ் ரவுஃபின் பந்தில் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்ந்து, பவுன்டரி அடித்து இந்திய அணியின வெற்றியை ரிங்கு சிங் உறுதி செய்தார். இந்த ஒரே தொடரில் பாகிஸ்தானை இந்தியா 3வது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடித் தீர்த்து வருகிறது.
ஆறே வார்த்தையில் ட்வீட்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெறும் ஆறே வார்த்தையில் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அவரது இந்த ட்வீட் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது அவர், "In the end, INTENT always wins," என்று பதிவிட்டுள்ளார். இறுதியில் மன உறுதியே வெல்லும் என்பது போலக் கம்பீர் ட்வீட் செய்திருக்கிறார். அவரது இந்த ட்வீட்டை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
முன்னதாக, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தானின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் 84 ரன்கள் எடுத்து ஒரு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும், அதன் பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் 9 விக்கெட்களை இழந்தது. வெறும் 33 ரன்கள் மட்டுமே பாகிஸ்தானால் எடுக்க முடிந்தது.
மேலும், இந்தப் போட்டியில் ஹாரிஸ் ரவுஃபின் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, விமானம் விபத்துக்குள்ளாவது போலச் சைகை செய்தார். முன்பு இந்திய ரசிகர்களைச் சீண்டும் வகையில் ரவுஃப் இதேபோல சர்ச்சை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதற்கு பும்ரா அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்திருந்தார்.
கோப்பையை வாங்க மறுத்த இந்தியா
ஆசியக் கோப்பை இந்தியா வென்றாலும் அதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து வாங்க இந்திய அணி மறுத்துவிட்டது. இதனால் அங்குக் கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் விருது வழங்கும் விழா தொடங்குவதற்குத் தாமதம் ஏற்பட்டது. நக்வி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர். நக்வி கோப்பையை வழங்குவார் என்று கூறிய போது, அதை வாங்க இந்திய அணி மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications