வங்கதேசத்தால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தான் போட்டியில் சிக்கல் இருக்காது.. அது எப்படி?
துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்திலேயே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 6 பேர் களமிறங்கி பேட்டிங் செய்திருப்பது சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டாப் 3 பேட்ஸ்மேன்களே ஆட்டத்தை முடித்திருந்தால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கேம்டைம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மிடில் ஆர்டர் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது லீக் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக அரையிறுதியை நோக்கி இந்திய அணி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இந்த ஆட்டத்திற்கு பின் இந்திய அணி நாளை மறுநாள் துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டம், இந்திய அணி வீரர்களுக்கும் கூடுதல் பதற்றத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கூட அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் உருவாகும். ஏற்கனவே பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்திருப்பதால், இந்த ஆட்டத்தில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளது.
அதேபோல் துபாய் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு கிட்டத்தட்ட சொந்த மைதானம் போல்தான். 2009 முதல் 2016 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 மைதானங்களைதான் பாகிஸ்தான் அணி பயன்படுத்தி வந்தது. இதனால் துபாய் மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களுக்கும் நன்றாக தெரியும். இந்திய அணி வீரர்களுக்கும் அனுபவம் இருக்கிறது என்றாலும், பிரஷர் அதீதமான ஒன்று.
2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளோம். இதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் இந்திய அணி தயாராக வேண்டும். இதனிடையே பாகிஸ்தான் போட்டியில் களமிறங்குவதற்கு முன் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியதில் ஒரு நல்ல விஷயம் நிகழ்ந்துள்ளது.
அது இந்திய அணியின் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என்று இரு தரப்புக்கும் கிடைத்துள்ள கேம்டைம் தான். எவ்வளவுதான் நெட்ஸில் பயிற்சி செய்தாலும், களத்தில் இறங்கி விளையாடும் அனுபவத்தை வேறு எந்த பயிற்சியாலும் கொடுக்க முடியாது. நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் போராடி 49.4 ஓவர்கள் விளையாடினார்கள்.
இதன் மூலமக இந்திய அணியின் பவுலர்கள் அனைத்து ஓவர்களையும் வீசியதோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் காத்திருப்பதும், விக்கெட் வீழ்த்த என்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்றாக புரிந்து கொண்டனர். அதேபோல் பேட்டிங்கில் 6 வீரர்களுக்கு கேம்டைம் கிடைத்திருக்கிறது. ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், அக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர் என்று மிடில் ஆர்டருக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
ஒருவேளை டாப் 3 பேட்ஸ்மேன்களே ஆட்டத்தை முடித்திருந்தால், பாகிஸ்தான் போட்டியின் போது மிடில் ஆர்டர் எந்தவித கேம்டைமும் கிடைக்காமல் நேரடியாக பதற்றம் நிறைந்த ஆட்டத்தில் விளையாட வேண்டிய சூழலில் தள்ளப்பட்டிருக்கும். தற்போது வங்கதேச அணியுடனான ஆட்டத்தில் அனைவருக்கும் கேம்டைம் கிடைத்திருப்பதால், பாகிஸ்தான் போட்டியில் எந்த சிக்கலும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications