1 இன்ச்சில்.. ஆர்சிபியை கதறவிட்ட "விவசாயி".. சம்பவம் செய்த தோனி.. எதிரே நின்று உற்று பார்த்த கோலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் அணிக்கு எதிராக சென்னையில் நடக்கும் ஐபிஎல் 2025 லீக் மேட்சில் தோனி எடுத்த ஸ்டம்பிங் விக்கெட் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

சிஎஸ்கே - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் குர்ரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.

இன்னொரு பக்கம் பெங்களூர் அணியில் விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வி), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் உள்ளனர்.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தற்போது மேட்ச் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் ஓவரிலே பெங்களூர் அணியின் சால்ட் அடித்து ஆட தொடங்கினார். அவர் 4 4 1 என்று முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்தார்.

IPL 2025 How did CSK Dhoni take the wicket of RCB Phil Salt with his lightening speed stumping

அடுத்த ஓவரிலேயே அஸ்வினை சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து வரவேற்றார். இதனால் பெங்களூர் அணியின் ஸ்கோர் வேகமாக உயர தொடங்கியது. பவர் பிளேவில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடித்து சென்னைக்கு பெங்களூர் கடுமையான பிரஷர் கொடுத்தது. அஸ்வினின் அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சென்றது.

சால்ட் அடித்த வேகத்தை பார்க்க எப்படியும் பெங்களூர் அணி 200+ ரன்களை எளிதாக அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

5வது ஓவரில் நூர் அஹமது வந்த பின்புதான் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. அந்த ஓவரில் சால்டை நிற்க வைத்து பிரஷர் கொடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தோனி அசத்தலான ஸ்டம்பிங் விக்கெட் எடுத்தார்.

Take a Poll

இது முந்தைய கேமில் சூர்ய குமார் யாதவை டிஸ்மிஸ் செய்ததை விடவும் சிறப்பாக இருந்தது. நூர் வீசிய கூக்லி பந்தை கணிக்க முடியாமல் சால்ட் இறங்கி வந்து அடிக்க பார்த்தார். அதன்பின் பந்தை மிஸ் செய்த சால்ட் காலை வைப்பதற்குள் அடித்தார். 1 இன்ச் கேப் இடைவெளியில் சால்ட் விக்கெட்டை தோனி எடுத்தார்.

எதிரே நின்ற கோலி இதை ஒரு நிமிடம் ஸ்டன் ஆகி பார்த்தார். மின்னல் வேகம் என்று சொல்வார்களே சரியாக அந்த மின்னல் வேகத்தில் தோனி அந்த விக்கெட்டை எடுத்தார். தோனி இந்த ஸ்டம்பிங் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டார் என்பது விரைவில் தெரிந்துவிடும் இதனால் பிரஷர் தந்த சால்ட் 32(16) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

எதிரே நின்ற கோலி ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஸ்டன் ஆகி பார்த்துக்கொண்டு இருந்தார். அன் கேப் வீரரான விவசாயி தோனி எடுத்த இந்த விக்கெட் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+