அஸ்வின்தான் "ரியல்" குற்றவாளி.. சிஎஸ்கே அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக மாறியது எப்படி? என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அஸ்வினின் தேர்வும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் அஸ்வின் தொடர்ச்சியாக மோசமாக சொதப்பி வருகிறார். அவரின் பவுலிங் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு இருக்கிறது.

கடந்த 5 போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் 1-2 விக்கெட்டுகளை அஸ்வின் எடுக்கிறார். ஆனாலும் பவர் பிளேவில் அதிக அளவில் ரன்களை கொடுக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நூர், ஜடேஜா குறைவாகவே ரன்களை கொடுக்கின்றனர். அதிக கன்ட்ரோலோடு போடுகின்றனர்.

IPL 2025 CSK

அஸ்வினின் ஆட்டம் டேட்டா

மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 31 ரன்கள் கொடுத்தார்.

பெங்களூருக்கு எதிரான முதல் இரண்டாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 2 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 22 ரன்கள் கொடுத்தார்.

ராஜஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 1 விக்கெட் எடுத்தார் 46 ரன்கள் கொடுத்தார்.

டெல்லிக்கு எதிரான நான்காவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 3 ஓவர்கள் 21 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.

பஞ்சாப்பிற்கு எதிரான ஐந்தாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 4 ஓவர்கள் போட்டு 2 விக்கெட் எடுத்தார் 48 ரன்கள் கொடுத்தார்.

மோசமான ஆட்டம்

சிஎஸ்கே அணியில் ஆடி வரும் மூத்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் மீது கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. அஸ்வின் சரியாக ஆடவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இவருக்கு மாற்று வீரராக அன்ஷுல் காம்போஜ் கொண்டு வரப்படுவார் என்று தகவல்கள் வருகின்றன.

சிஎஸ்கே கேப்டனாக ருத்துராஜ் விரும்பிய வீரர்களை எடுக்க முடியவில்லை. லெகசி என்பதற்காக அஸ்வினை எடுத்தனர். அஸ்வின் பவுலிங், பேட்டிங்கில் பார்மில் இல்லை. அவரை எடுத்த 10 கோடி ரூபாய்க்கு இன்னும் சிறப்பாக சிஎஸ்கே வேறு வீரர்களை எடுத்து இருக்க முடியும். முக்கியமாக மிடில் ஆர்டரில் ஆட ஆல் ரவுண்டர் பவர் ஹிட்டரை எடுத்திருக்க முடியும்.

ஆனால் மற்ற வீரர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் அஸ்வின் மீது வைக்கப்படுவது இல்லை. பெரும்பாலான தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அஸ்வினின் நண்பர்கள், வெளியே விமர்சனம் வைக்கும் தமிழ் விமர்சகர்கள் அஸ்வினின் நண்பர்கள் .

தொடரும் சொதப்பல் ஆட்டம்

அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார்.

பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது.

ஆப் ஸ்பின்

முக்கியமாக அவர் போடும் ஆப் ஸ்பின் சரியாக இல்லை. அதிகமாக கேரம் பால் போடுகிறார். முக்கியமாக பவர் பிளேவை சொதப்புவதே அவர்தான். இரண்டாவது ஓவரில் பந்து வீசுகிறார். 20+ ரன்களை கொடுக்கிறார். ஆட்டத்தை மாற்றிவிட்டு செல்கிறார் . பேட்டிங்கிலும் சரியாக ஆடுவது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அன்ஷுல் காம்போஜ் உயரமான, வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தனது பவுலிங் மூலம் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அலைகளை உருவாக்கி வருகிறார். பிப்ரவரி 2022 இல் திரிபுராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி ஆட்டத்தில் உள்நாட்டு போட்டிகளில் முதல்முறையாக அறிமுகமானார். 2023-24 விஜய் ஹசாரே சீசனில் 10 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார். அந்த சீசனில் ஹரியானா வெற்றிபெற காரணமாக இருந்தார்.

நவம்பர் 2024 இல், அன்ஷுல் காம்போஜ், கேரளாவுக்கு எதிராக ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்தார். 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார், மூன்று ஆட்டங்களில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2025 ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அன்ஷுல் கம்போஜ் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. பவர் பிளே வில் சிஎஸ்கே பவுலிங் சொதப்புவதை இவர் தடுப்பார். ஏற்கனவே போதுமான ஸ்பின் பவுலர்கள் உள்ளனர். இவரை உள்ளே கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+