உச்சக்கட்ட கோபத்தில் சூர்யகுமார் யாதவ்! ஆசிய கோப்பையுடன் ஓடிய பாக். அமைச்சர்! எவ்வளவு கேவலம் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இருப்பினும், இந்தப் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடம் இருந்து இந்தியா கோப்பையைப் பெற மறுத்துவிட்டது. இதனால் நக்வி ஆசிய கோப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சூர்யகுமார் யாதவ் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தானைக் கடைசி ஓவரில் வீழ்த்தி, 9வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. இருப்பினும், அதன் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது.

Suryakumar Yadav Blasts ACC Chief Mohsin Naqvi for Taking Asia Cup Trophy says Never Seen This

ஆசியக் கோப்பை

இதையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோஹ்சின் நக்வி ஆசியக் கோப்பையையும், பதக்கங்களையும் எடுத்துக் கொண்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். இறுதிப் போட்டியில் வென்ற அணியிடம் கோப்பையையும் பதக்கங்களையும் தராமல்.. அதை கையோடு நக்வி எடுத்துச் சென்றது சர்ச்சையாக வெடித்தது.

சூர்யகுமார் யாதவ் தாக்கு

இதற்கிடையே நக்வி செயல் குழந்தைத்தனமானது என்று இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிக்கத் தொடங்கியது அல்லது விளையாட ஆரம்பித்தது முதல் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்து இல்லை. சாம்பியன் அணிக்குக் கோப்பை மறுக்கப்படுவதை இதுவரையிலும் நான் பார்த்ததில்லை. இது நாங்கள் கடினமாகப் போராடி வென்ற கோப்பை.. எளிதாகப் பெற்றுவிடவில்லை. கடினமான உழைப்புக்குப் பிறகு கிடைத்த வெற்றி இது.

இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முக்கியமான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறோம். இதைவிட என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் கோப்பை பெறத் தகுதியான அணி என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

எங்கள் டிராபி

இந்திய அணி ஆசியக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. லீக் சுற்று, சூப்பர் 4 என விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. அணி வீரர்களும் சப்போர்ட் ஸ்டாப்களும் தான் இதற்கு முக்கிய காரணம் என சூர்யகுமார் யாதவ் கூறினார். அவர் மேலும், "என்னுடைய டிராபிகள் எல்லாம் இப்போது டிரஸ்ஸிங் ரூமில் இருக்கிறார்கள். என்னுடன் இருக்கும் 14 வீரர்களும், அனைத்து உதவி ஊழியர்களும் தான் உண்மையான டிராபிக்கள்.. இது எனது வாழ்க்கையில் இனிமையான நினைவுகளாக எப்போதும் என்னுடன் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரிடமிருந்து கோப்பையை ஏன் இந்திய அணி வாங்க மறுத்தது என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது சூர்யகுமார் யாதவ் அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்தார். அவர் மேலும், "ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடித்தார். இந்தியா ஆசியக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, நாங்கள் வெளியே வந்து கொண்டாடினோம். திலக், குல்தீப் மற்றும் பாய் (அபிஷேக்) ஒரு கார் பெற்றார்கள். அதையும் கொண்டாடினோம். வேறு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+