துணை கேப்டனுக்கே பெஞ்ச்.. வாஷிங்டன் சுந்தரை களமிறக்க வேண்டிய காரணம் என்ன? பின்னணி
அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் துணைக் கேப்டன் அக்சர் படேல் பெஞ்ச் செய்யப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்ட சூழலில், இது சம்பிரதாய ஆட்டமாக அமைந்துள்ளது. இருந்தாலும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதனால் அகமதாபாத் மைதானத்தை நன்றாக புரிந்து கொள்ள இந்த ஆட்டம் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த பிட்சில் பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால், பவுலர்களுக்கு கொஞ்சம் சவால் அளிக்கலாம் என்று முடிவு எடுத்ததாக கூறி இருக்கிறார்.
அதேபோல் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் பெஞ்ச் செய்யப்பட்டு அர்ஷ்தீப் சிங்கும், துணைக் கேப்டன் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அக்சர் படேலின் சொந்த மைதானம் இது.
இருப்பினும் காயத்தில் இருந்து வந்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு கம்பீரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால், குல்தீப் யாதவை சேர்க்க வேண்டிய சூழல் உள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணியுடன் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால், 3 ஸ்பின்னர்கள் கண்டிப்பாக தேவை. இதனால் ஒரு பேட்ஸ்மேனை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்த்தால் நம்பர் 9 வரை பேட்டிங் வரிசை நீண்டு கொண்டே செல்லும். இதன் காரணமாகவே வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications