விராட் கோலியின் 10ம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? உத்வேகமளிக்கும் மார்க்ஷீட்!
மும்பை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இதனை விராட் கோலி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. இதில் மாணவிகளில் 95.88 சதவிகிதம் பேரும், மாணவர்களில் 91.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.80 ஆக உள்ளது.

இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அண்மையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருந்தார். 36 வயதாகும் விராட் கோலி, 100 சதங்களை விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவேன் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி தனது 10ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் 83 மதிப்பெண்களையும், இந்தி பாடத்தில் 75 மதிப்பெண்களையும், கணித பாடத்தில் 51 மதிப்பெண்களையும், அறிவியலில் 32 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.
அதேபோல் சமூக அறிவியலில் 81 மதிப்பெண்களையும், இண்ட்ரோடக்டரி பாடத்தில் 74 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்துள்ள விராட் கோலி, சிறந்த மதிப்பெண்களை எடுத்துள்ளார். அதன்பின் 12ஆம் வகுப்பு வரை படித்த விராட் கோலி, கல்லூரி செல்வதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் ஒப்பந்தத்தை கைப்பற்றினார்.
தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்த விராட் கோலி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வீரராக இருந்து வருகிறார். இதனால் அடிப்படை கல்வி கட்டாயம் அவசியம் என்று விராட் கோலியின் மதிப்பெண்கள் மறைமுகமாக உணர்த்துவதாக பார்க்கப்படுகிறது. மேலும், விராட் கோலி தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications