86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 74 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 86வது சதம் இதுவாகும். இதனால் விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் 296 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி சேஸிங்கை தொடங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின், நட்சத்திர வீரர் விராட் கோலி களம் புகுந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

Virat Kohli

முதல் சில பந்துகளிலேயே பவுண்டரி, சிக்சர் என்று பொளந்து கட்டிய விராட் கோலி, கொஞ்சம் கூட ஆட்டத்தில் இருந்து கட்டுப்பாட்டை தளரவிடவில்லை. பேட்டிங்கில் முழு கட்டுப்பாட்டுடன் ஆடிய விராட் கோலியால், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினர். அதனை அதிகரிக்கும் வகையில் 44 ரன்களில் இருந்த விராட் கோலி சிக்ஸ் அடித்து அரைசதத்தை எட்டினார்.

இதன்பின் பவுண்டரிகளில் டீல் செய்த விராட் கோலி, வேகமாக ரன்களை சேர்க்க தொடங்கினார். அதேபோல் சரியான லெந்தில் பிக் செய்து சிக்சர்களையும் விராட் கோலி பறக்கவிட்டார். சதத்தை நெருங்கிய போது, திருவனந்தபுரம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல், டிவியில் பார்த்த நமக்கும் பதற்றம் அதிகரித்தது.

ஆனால் அந்த பதற்றத்திற்கு எல்லாம் வேலையே இல்லை என்று சொல்வதை போல் விராட் கோலி, 94 ரன்கள் எடுத்த போது சிக்ஸ் அடித்து சதத்தை எட்டினார். 74 பந்துகளில் விராட் கோலி சதம் விளாசியது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 55வது சதம் இது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 86வது சதம் இது.

இன்னும் 14 சதங்களை விராட் கோலி விளாசினால், 100 சதங்களை விளாசிய 2வது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும். நீண்ட நாட்களுக்கு பின் விராட் கோலி விளையாடிய நிலையில், அவரின் ஆட்டம் ரசிகர்களுக்கு சிறந்த ஃபீஸ்ட்டாக அமைந்திருக்கிறது. இதனால் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+