ரூ. 7 கோடி வாட்ச்.. ஹர்திக் பாண்டியா கையை பாருங்க.. அப்படி என்ன ஸ்பெஷல்? காதலி கொடுத்த பரிசா?

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்த வாட்ச் ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. ரிச்சர்ட் மிலே நிறுவனத்தில் RM 27 வகையிலான இந்த வாட்சின் விலை மட்டும் இந்திய மதிப்புப்படி ரூ.6.92 கோடியாகும். இதனால் அந்த வாட்சில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று ரசிகர்கள் பலரும் தேடி வருகின்றனர். அதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. வழக்கமாக இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ, அடுத்த நாள் வீரர்களின் செயல்பாடுகள் குறித்த நிறை மற்றும் குறை மட்டுமே ரசிகர்களின் விவாதமாக இருக்கும்.

ind vs pak Hardik Pandya Richard Mille Watch vs

ஆனால் நேற்று ஹர்திக் பாண்டியா கட்டி இருந்த வாட்ச் ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. அதற்கு அந்த வாட்சின் விலையே முக்கிய காரணமாகும். ரிச்சர்ட் மிலே நிறுவனத்தின் RM 27 வாட்சின் விலை மட்டும் இந்திய மதிப்பின்படி ரூ.6.92 கோடியாகும். இது ஒரு லிமிடெட் எடிஷன் வாட்ச். அதாவது உலகிலேயே அந்த வகையில் 50 வாட்ச்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் போல், ஹர்திக் பாண்டியாவின் வாட்சும் லிமிடெட் எடிஷன்தான். டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இந்த வாட்சின் பேஸ் மட்டும் கார்பனால் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எவ்வளவு அதிர்வுகளையும் தாங்க கூடிய வகையில் வாட்ச் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நீண்ட காலம் இந்த வாட்ச் பயன்படுத்த முடியும். வாட்சின் உட்புறம் கிரேடு 5 டைட்டானியம் மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதால், கைகளில் வாட்ச் கட்டியிருக்கும் உணர்வே மனிதர்களுக்கு இருக்காது. இதன் கண்ணாடி பகுதியில் கிளார் அடிக்காமல் இருப்பதற்காக ஆன்டி-கிளேர் கிரிஸ்டல் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த கீறலும் வாட்சில் விழாது. 70 மணி நேரம் வரை இயங்கக் கூடிய வாட்ச் ஆகும். இதனை லக்சுரி வாட்ச் சந்தையில் டெக்னிக்கல் மார்வெல் என்று புகழ்கிறார்கள்.

லக்சுரி வாட்ச் சந்தையில் இதுவே டாப் பிராண்ட் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த வகையான வாட்ச்களை இந்திய அணியின் விராட் கோலி ஏற்கனவே அணிந்திருக்கிறார். டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி உள்ளிட்ட பலரும் இந்த வகையான வாட்சையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி என்று கூறப்பட்டு வரும் ஜாஸ்மீன் வாலியா பரிசாக அளித்தது என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+