ஐசிசியை கண்ட்ரோல் பண்றாங்க.. இந்தியாவின் வெற்றி "சீட்டிங்".. கதறும் ஆஸ்திரேலியர்கள்.. என்ன காரணம்?
துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளை துபாயில் ஆடியதை ஆஸ்திரேலியர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. அதிகபட்சமாக விராட் - 84, ஸ்ரேயஸ் ஐயர் - 45 ரன்கள் குவித்தனர்.
நேற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தொடக்கத்திலேயே திணற தொடங்கியது. ஆஸ்திரேலியா என்று வந்துவிட்டாலே இந்தியா பவுலிங் சொதப்புவதுதான் சமீபத்திய டிரெண்ட். முக்கியமாக ஹெட் இந்திய அணியின் பவுலிங்கை துவம்சம் செய்வதே வழக்கம்.

ஆனால் நேற்று ஹெட் வெறும் 39 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேட் தொடர்ந்து அதிகரித்தாலும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. ஸ்மித் அதிரடியாக 73 ரன்கள் எடுத்தார்.
ஆனால் ரன் கூடினாலும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. அலெக்ஸ் கேரி 61 ரன்கள் எடுத்து அவுட்டாகும் வரை ஆஸ்திரேலிய அணி நல்ல சூழலில்தான் இருந்தது. ஆனால் சிக்கலே.. அதன்பின் வரிசையாக ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 49.3 ஓவரிலேயே 264-10 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி அவுட் ஆனது.
இதையடுத்து இந்திய அணியில் ரோஹித் சர்மா 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கில் வெறும் 8 ரன்கள் எடுத்தார். அதன்பின் கோலி, ராகுல், பாண்டியா அதிரடியால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. அதிகபட்சமாக விராட் - 84, ஸ்ரேயஸ் ஐயர் - 45 ரன்கள் குவித்தனர். ராகுல் வெறும் 34 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். பாண்டியா வெறும் 24 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்.
விமர்சனம்
சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளை துபாயில் ஆடியதை ஆஸ்திரேலியர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தியாவின் வெற்றி சீட்டிங்.. ஐசிசியை பிசிசிஐ கண்ட்ரோல் செய்வதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியர்கள் இப்படி கதற காரணம் உள்ளது.
1. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையின் எல்லா போட்டிகளையும் ஒரே இடத்தில் துபாயில் ஆடுகிறது. மற்ற அணிகள் துபாய் - பாகிஸ்தான் இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டி உள்ளது.
2. அதிலும் சில அணிகளுக்கு அடுத்த போட்டியை நாம் எங்கே ஆட போகிறோம்.. துபாயில் ஆட போகிறோமா.. பாகிஸ்தானில் ஆட போகிறோமா என்பதே தெரியாத நிலை உள்ளது.
3. இந்தியாவிற்கு பயணம் இல்லாததால் பயிற்சி எடுக்க நேரம் இருக்கிறது. ஆனால் மற்ற அணிகளுக்கு நேரம், ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைப்பது இல்லை.
4. இந்திய அணி துபாய் பிட்ச் என்பதால் ஸ்பின் பவுலர்களை எடுத்துள்ளது. ஆனால் மற்ற அணிகள் பாகிஸ்தானை மனதில் வைத்து பாஸ்ட் பவுலர்களை எடுத்தது. அவர்களால் துபாயில் இந்திய அணியை சமாளிக்க முடியவில்லை.
5. இதெல்லாம் இந்திய அணிக்கு கூடுதலாக சாதகமாக மாறி உள்ளது. மற்ற அணிகளுக்கு எதிராக மாறி உள்ளது. இதைத்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications