Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர் கண்ட சிங்கம்.. WWE ரிங்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறிய John Cena! உணர்ச்சி பிளம்பான அரங்கம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி நகரில் நடைபெற்ற WWE 'Saturday Night's Main Event' நிகழ்ச்சி, WWE ரெஸ்லிங் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா, தனது 20 ஆண்டுகளைக் கடந்த ரெஸ்லிங் பயணத்தை இந்த போட்டியுடன் முடித்துக் கொண்டார். Capital One Arena-வில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் சீனா தோல்வியடைந்த நிலையில், ரிங்கை விட்டு அவர் வெளியேறும் போது லட்சக்கணக்கான ரசிகர்களும், WWE வீரர்களும் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

டபுள்யு.டபுள்யு.இ என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் பெயர் அண்டர் டேக்கர். 7 அடி உயரம் ஸ்டைலான நடை மிரட்டலான அறிமுகத்தோடு வரும் அவருக்கு ஏழு உயிர்டா என சொல்லாத 90'ஸ் கிட்ஸே இருக்க முடியாது.

அண்டர் டேக்கருக்கு அடுத்து தி ராக் எனப்படும் டுவைன் ஜான்சன், ஜான் சீனா, ரேண்டி ஆர்டன், ரோமன் ரென்ய்ண்ட்ஸ், ரே மிஸ்டீரியோ என பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் நீளும் அளவுக்கு இந்த பட்டியல் பெரிது.

John Cena retirement

WWE ஜான் சீனா

அவர்களில் 90'ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்தவர்களில் ஜான் சீனா முக்கியமானவர். 'The Time Is Now' தீம் மீயூசிக்கோடு அவர் கொடுக்கும் எண்ட்ரியை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் தான் தனது ரெஸ்லிங் பயணத்தை முடித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். 17 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சீனா, வாஷிங்டன் டிசியில் உள்ள Capital One Arena-வில் நடைபெற்ற தனது கடைசி WWE போட்டியில் குந்தர் (Gunther) உடன் மோதினார். நிகழ்ச்சி தொடங்கிய முதலே, ரசிகர்கள் சீனாவை கொண்டாடி வந்தனர்.

சனிக்கிழமை மெயின் ஈவென்ட்

முதலில் குந்தர் அரங்கிற்குள் நுழைந்தபோது, வாஷிங்டன் ரசிகர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஜான் சீனாவின் 'The Time Is Now' தீம் ஒலித்ததும், அரங்கமே அதிர்ந்தது. ஆயிரக்கணக்கில் எழுந்து நின்ற ரசிகர்கள் கைத்தட்டலுடன் சீனாவை வரவேற்றனர். சீனா வேகமாக ரிங்கிற்குள் ஓடி வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து மரியாதை செலுத்தியதோடு, தனது நீண்ட ரெஸ்லிங் பயணத்தில் எதிராக நின்ற சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜான் சீனா குந்தர் போட்டி

தொடர்ந்து போட்டி தொடங்கியதும் குந்தர் முழுமையாக ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஆனால் ஜான் சீனா எளிதில் சரணடையவில்லை. 'Five Knuckle Shuffle', 'STF', 'Attitude Adjustment' போன்ற தனது அடையாளமான மூவ்ஸ்களை தொடர்ந்து பயன்படுத்தி குந்தரை கட்டுப்பாட்டியேலே வைத்தார். ஒவ்வொரு முறை சீனா எழுந்து போராடும் போதும், அரங்கம் முழுவதும் "You still got it" என்ற கோஷம் எதிரொலித்தது.

ஜான் சீனா கடைசி போட்டி

போட்டியின் இறுதி நிமிடங்கள் மிகுந்த பதற்றத்துடன் நகர்ந்தன. சீனா தொடர்ச்சியாக இரண்டு 'Attitude Adjustment' மூவ்ஸ்களை கொடுத்தார். அதுமட்டுமின்றி, மேலிருந்து குதித்து ஒரு அபாயகரமான 'Attitude Adjustment'-ஐயும் போட்டு, குந்தரை நிலைகுலைய செய்தார்.. ஆனால் அதையும் தாங்கி எழுந்த குந்தர், மீண்டும் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை தன் பக்கம் திருப்பினார். சீனாவை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தினார்.

ஜான் சீனா உணர்ச்சி தருணம்

இறுதியாக, ரிங்கின் நடுப்பகுதியில் குந்தர் 'Sleeper Hold' பிடியை சீனாவுக்கு போட்டு, தப்பிக்க எந்த வாய்ப்பும் இல்லாத நிலையை உருவாக்கினார். பல ஆண்டுகளாக தோல்வியை மறுத்து வந்த சீனா, கடைசியில் சக்தி விட்டுக் கொடுத்தார். கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக, WWE ரிங்கில் ஜான் சீனா சரணடைந்த தருணம் இது. அந்த நிமிடம் அரங்கில் சில விநாடிகள் அமைதி நிலவியது. பின்னர் அதிர்ச்சி, சோகம், நன்றி உணர்வு என பல்வேறு உணர்ச்சிகள் ரசிகர்களிடையே வெளிப்பட்டது.

ரெஸ்லிங் ரசிகர்கள்

போட்டி முடிந்ததும், WWE லாக்கர் ரூமில் இருந்த பல வீரர்கள் ரிங்கிற்குள் வந்து சீனாவை சூழ்ந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். அரங்கின் பெரிய திரையில் அவரது வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய தருணங்கள் ஒளிபரப்பப்பட்டன. இறுதியாக, ஜான் சீனா தனது பூட்ஸ்களை ரிங்கில் வைத்து, கேமராவை நோக்கி வணக்கம் செலுத்தினார். "இந்த பல ஆண்டுகள் என்னுடன் இருந்ததற்கு நன்றி. உங்களுக்குச் சேவை செய்தது பெருமை," என அவர் கூறியபோது, ரசிகர்கள் கண்ணீருடன் கைத் தட்டினர். அதனைத் தொடர்ந்து, சீனா மெதுவாக ராம்ப் வழியாக வெளியேறினார்.

ஜான் சீனா பிரியாவிடை

அந்த நடை, WWE வரலாற்றில் ஒரு பொற்காலம் முடிவடைந்ததற்கான சாட்சியாக மாறியது. ஜான் சீனாவின் இந்த இறுதிப்போட்டி, ஒரு தலைமுறை WWE ரசிகர்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என சமூக வலைதளங்களில் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+