For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்குள் 5 கி.மீ. ஊடுருவி கைது செய்த 55 தமிழக மீனவர்கள் விடுதலை- இலங்கை நீதிமன்றம்

Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இந்தியாவுக்குள் 5 கி.மீ. ஊடுருவி கைது செய்த 55 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை நீதிமன்றம் திடீரென தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 55 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். முதலில் 43 பேரும் பின்னர் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதுவும் இலங்கையின் வடபகுதிக்கு சீனா தூதர் வந்து சென்ற பின்னரே தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழக மீனவர்களை சீனாவின் தூண்டுதலில் இலங்கை கடற்படை கைது செய்ததா? என்கிற கேள்வியும் எழுந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

 55 மீனவர் கைது- ஸ்டாலிம் கடிதம்

55 மீனவர் கைது- ஸ்டாலிம் கடிதம்

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

 நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

இவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, தாங்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கவில்லை என தெரிவித்தனர் மீனவர்கள். இதனையடுத்து தமிழக மீனவர்களை கைது செய்த இடம் குறித்த வரைபட அறிக்கையை தாக்கல் செய்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்தியாவுக்குள் ஊடுருவி கைது

இந்தியாவுக்குள் ஊடுருவி கைது

இதனடிப்படையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்திய கடற்பரப்புக்குள் 5 கி.மீ. ஊடுருவியே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததை கண்டறிந்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இலங்கை தமிழ் ஊடகங்கள் இது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைத்தன.

 படகுகள் ஏலம்

படகுகள் ஏலம்

இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து முன்னர் கைப்பற்றிய 105 படகுகளை ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்தது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் இந்த ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளார்.

 55 மீனவர்கள் திடீர் விடுதலை

55 மீனவர்கள் திடீர் விடுதலை

இதனிடையே இன்று திடீரென இலங்கை அத்துமீறி கைது செய்த 55 தமிழக மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி இந்த 55 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் விடுதலை மூலம் படகுகள் ஏலம் விடுவதால் ஏற்பட்டுள்ள விவகாரத்தை மடைமாற்றுகிறது இலங்கை என்கின்றனர் தமிழக மீனவர்கள்.

English summary
55 Tamil Nadu fishermen relased by Sri Lankan Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X