For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“ஒன்பதுல” அப்படி என்னதான் இருக்கு? இலங்கை மக்கள் புரட்சியும் 9 ஆம் தேதிகளும்.. ஒரு சுவாரஸ்ய தகவல்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதிகளில் போராட்டம் உக்கிரமடைந்து ஏதாவது ஒரு மிகப்பெரிய சம்பவம் அரங்கேறி வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

நாம இப்டியே இருக்கக்கூடாது.. புதுசா ஏதாச்சும் பண்ணனும் - பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ் நாம இப்டியே இருக்கக்கூடாது.. புதுசா ஏதாச்சும் பண்ணனும் - பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்

ஏப்ரல் 9 ஆம் தேதி

ஏப்ரல் 9 ஆம் தேதி

இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பொதுமக்கள் இலங்கையின் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

மே 9 ஆம் தேதி

மே 9 ஆம் தேதி

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே கடந்த மே 9 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார். பொதுமக்கள் ராஜபக்‌ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.

ஜூன் 9 ஆம் தேதி

ஜூன் 9 ஆம் தேதி

ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றும் இலங்கையின் நிலை மோசமடைந்துகொண்டே சென்றது. இதனால் அடுத்த பிரதமராகவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பசில் ராஜபக்‌ஷே. ஜூன் மாதம் மக்கள் புரட்சி வேகமெடுத்து பசில் ராஜபக்‌ஷே குறிவைக்கப்பட்டார். அழுத்தம் தாங்க முடியாமல் ஜூன் 9 ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்தே பசில் ராஜினாமா செய்தார்.

ஜூலை 9 ஆம் தேதி

ஜூலை 9 ஆம் தேதி

இந்த நிலையில் ஜூலை 9 ஆம் தேதியான இன்று அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து அதிபர் மாளிகை மற்றும் அதிபரின் செயலகத்திற்கு பொதுமக்கள் புகுந்தனர். அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். அவரது வீடும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

English summary
April 9, May 9, June 9, July 9 are the threshold points of Srilankan protests: இலங்கையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதிகளில் போராட்டம் உக்கிரமடைந்து ஏதாவது ஒரு மிகப்பெரிய சம்பவம் அரங்கேறி வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X