For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்ல எங்களது மீனவர்களை விடுவியுங்கள், பிறகு பார்க்கலாம்.. இலங்கை திமிர்ப் பேச்சு

Google Oneindia Tamil News

Lanka puts conditions to free Indians
கொழும்பு: தமிழ்நாடு அரசு முதலில் இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும். அதன் பிறகுதான் நாங்கள் தமிழக மீனவர்களை விடுவிப்போம் என்று திமிர்த்தனமாக பேசியு்ளார் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஞ்சிதா சேனரத்னே.

இலங்கையில் 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க மத்திய அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கக் காணோம். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா,நல்லெண்ண நடவடிக்கையாக, தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்போம் என்று அறிவித்துள்ளார்.

பதிலுக்கு இதேபோல 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்போம் என்று இலங்கை கூறும் என்று பார்த்தால், முதலில் இலங்கை மீனவர்கள் விடுதலையாகி வந்து சேரட்டும். பிறகுதான் தமிழக மீனவர்களை விடுவிப்போம் என்று நிபந்தனை போட்டுள்ளது இலங்கை அரசு.

இதுகுறித்து சிங்கள மீன்வளத்துறை அமைச்சர் ரஞ்சிதா சேனரத்னே என்பவர் கூறுகையில், தமிழ்நாடு எங்களது மீனவர்களை விடுவித்து அவர்கள் வந்து சேர்ந்த பிறகுதான் நாங்கள் தமிழக மீனவர்களை விடுவிப்போம்.

அதுவரை நாங்கள் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று திமிர்த்தனமாக பேசியுள்ளார்.

என்ன ஒரு அயோக்கியத்தனமான பேச்சு...

English summary
The Sri Lankan Government says it will free over 200 Indian fishermen in Sri Lankan custody only after Tamil Nadu releases Sri Lankan fishermen held in Tamil Nadu. Fisheries minister Rajitha Senaratne, said the Indians will not be freed until the Sri Lankans are also set free. Tamil Nadu Chief Minister J Jayalalithaa had yesterday ordered the release of 179 Sri Lankan fishermen lodged in Tamil Nadu jails, mostly arrested for trespassing into Indian waters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X