தமிழக மீனவர்களின் 122 படகுகளை நாட்டுடமையாக்கியது இலங்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 122 இழுவைப் படகுகளையும், இதர சாதனங்களையும் நாட்டுடமையாக்க விட்டதாக இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீரா கூறியுள்ளார்.

இந்தப் படகுகளை திருப்பித் தர மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படகுகள் தவிர மேலும் 140 படகுககளைக் கைப்பற்றியுள்ளதாகவும் அமரவீரா கூறியுள்ளார்.

Lankan govt nationalise 122 TN fishermen's boats

இதுகுறித்து இலங்கையிலிருந்து வெளியாகும் தினகரன் இதழில் வெளியாகியுள்ள செய்தி:

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் எவரது படகுகளையோ உபகரணங்களையோ திருப்பித் தரப் போவதில்லை என கடல் தொழிலியல் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் இந்திய படகுகளை தடுத்து வைத்து வருவதன் மூலம் இந்திய மீனவர்கள் வருவது 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது 122 இழுவைப்படகுகளுடன் மேலும் 140 நாட்டுப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுடன் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அரசுடமையாக்கப்பட்ட படகுகளையோ உபகரணங்களையோ விடுவிக்க மாட்டோம்.

கைது செய்யப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பிரகாரம் விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை உறுதி செய்யும் வகையில்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lankan minister Mahinda Amaraveera has said that the Lankan govt has taken 122 fishing boats belonged to Tamil Nadu fishermen for violation of law.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற