For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: ஐநா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்து நவிபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வன்முறையை தடுப்பதற்கு இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும். அனைத்து சிறுபான்மையினரையும் இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Navi Pillay alarmed at clashes in Sri Lanka

மேலும், இந்த வன்முறைகள் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிற பகுதிகளுக்கும் பரவலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

English summary
The UN High Commissioner for Human Rights was reacting the violent clashes between Buddhists and Muslims in Aluthgama on Sunday that left three persons dead and nearly 80 injured
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X