For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

Google Oneindia Tamil News

கொழும்பு: டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் 8 புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் உணவு பஞ்சம் உச்சம் தொட வாய்ப்பு உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை உணவு பஞ்சத்தை சமாளிக்க வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிநிலவி வருகிறது. இதையடுத்து அங்கு அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1948க்கு பின் இலங்கையில் நிலவும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sri Lanka Economic Crisis and Protest Live News Updates in Tamil

Newest First Oldest First
11:47 AM, 23 May

இலங்கையில் டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
9:19 AM, 23 May

இலங்கையை போல இதர நாடுகளிலும் புரட்சிக்கு வாய்ப்பிருக்கிறது: உலக வங்கி எச்சரிக்கை
8:12 AM, 23 May

நிவாரணப் பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி- மனோ கணேசன் எம்.பி.
7:54 AM, 23 May

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை எம்.பி.யாவதை தடை செய்யும் அரசியல் சாசன திருத்தம் இன்று அமைச்சரவையில் தாக்கல்
7:18 AM, 23 May

இலங்கையில் அடுத்த மாதம் மிகப் பெரும் வன்முறை ஏற்படும் அபாயம் உள்ளது- எம்.பி பாட்டலி சம்பிக்க ரணவக்க
7:02 AM, 23 May

இலங்கை வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன நியமனம்
7:02 AM, 23 May

இலங்கையில் 2 வாரங்களில் 92 குரங்கு அம்மை நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன
7:02 AM, 23 May

இலங்கை: மே9 வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 1,500 பேர் கைது
7:10 PM, 22 May

தமிழ்நாடு அரசுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி
7:10 PM, 22 May

தமிழக அரசின் மனிதாபிமான உதவிக்காக நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
7:10 PM, 22 May

தமிழக அரசு அனுப்பிய அரிசி, பால் பவுடர், மருந்துகள் இன்று கொழும்பு சென்ற நிலையில் ரணில் நன்றி
3:11 PM, 22 May

பொதுமக்களின் தாக்குதல்களுக்கு பயந்து கடந்த செவ்வாய்க்கிழமை எம்.பிக்கள் தம்மை உருமாற்றியே நாடாளுமன்றத்துக்கு வருகை தந்ததாக சிங்கள வார ஏடு தகவல்
10:54 AM, 22 May

குரங்கு அம்மை பரவல் தொடர்பாக இலங்கையிலும் தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
10:25 AM, 22 May

இலங்கை மாவத்தகம பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
8:50 AM, 22 May

15 இலங்கை நாட்டவருடன் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற படகு தடுத்து நிறுத்தம்
8:38 AM, 22 May

தமிழக அரசின் நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு வந்தடையும்
8:38 AM, 22 May

இலங்கை: ராணுவ புரட்சிக்கு சிங்கள ராணுவம் தயார்- ராணுவ தளபதி சவேந்திர சில்வா
8:01 AM, 22 May

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க
7:06 AM, 22 May

சென்னையில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டம்- அனுமதி இல்லாமல் நடத்தியதால் போலீஸ் கைது
6:39 AM, 22 May

இலங்கையில் அவசர கால சட்டம் நீக்கம்- ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே
6:39 AM, 22 May

மே 9 வன்முறை தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி விக்ரமரத்னவிடம் 5 மணிநேரம் விசாரணை
6:39 AM, 22 May

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான்- யாழ்ப்பாணம் வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம்
6:39 AM, 22 May

இந்தியா கடனுதவியால் பெறப்பட்ட 40,000 மெட்ரிக் டன் டீசலுடன் கப்பல் கொழும்பு வந்தடைந்தது
12:08 PM, 21 May

இலங்கை பொருளாதார நெருக்கடியால் இலங்கை தமிழர்களுக்கு கடும் பாதிப்பு. ஆபத்தான முறையில் படகுகள் மூலம் தமிழகம் வரும் நிகழ்வுகள் அதிகரிப்பு. சில நாட்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர்
12:06 PM, 21 May

இலங்கை: அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என்று உத்தரவு. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக யாரும் அலுவலகம் வர வேண்டாம் என்று உத்தரவு
11:13 AM, 21 May

இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்பு - பிரதமர் ரணில் எச்சரிக்கை. ஆகஸ்ட் மாதத்தில் உணவு பஞ்சம் உச்சம் தொட வாய்ப்பு - ரணில். அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை உணவு பஞ்சத்தை சமாளிக்க வேண்டும் - ரணில் எச்சரிக்கை
6:01 PM, 20 May

வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதால் குடிமக்கள் இலங்கை செல்ல கூடாது: தென்கொரியா திடீர் தடை
5:12 PM, 20 May

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று சந்தித்து ஆலோசனை
5:12 PM, 20 May

மே 9 வன்முறை- மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவிடம் போலீஸ் விசாரணை
12:09 PM, 20 May

ராஜபக்சே ஆதரவு எம்.பி. அத்துகோரள படுகொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது
READ MORE

English summary
Sri Lanka Crisis and Protest (இலங்கை பொருளாதார நெருக்கடி & வன்முறை போரட்டம் ) LIVE News Updates in Tamil: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X