For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனவரி 8-ல் அதிபர் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

இலங்கையில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பதவிக் காலம் இன்னமும் 2 ஆண்டுகாலம் இருக்கிறது. இருப்பினும் ராஜபக்சேவுக்கு எதிரான அலை இலங்கையில் எழத் தொடங்கியுள்ளதால் முன்கூட்டியே தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

Sri Lanka Presidential Election Set for January 8 Next Year

இந்த நிலையில் ஜனவரி மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 8-ந் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ராஜபக்சேவின் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால பொதுச்செயலாளரும் ராஜபக்சே அரசின் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக களம் இறக்கியுள்ளன.

மற்றொரு சிங்கள அமைப்பான ஜே.வி.பி. கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளர் களத்தில் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதனிடையே அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். பாப்பாண்டவர் இலங்கை விஜயம் செய்யும் காலப்பகுதிற்கு மிகவும் அண்மைய நாட்களிலோ அல்லது அதன் பின்னரான அண்மைய நாட்களிலோ ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ திகதியை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

English summary
On a day of high political drama when the ruling coalition of Sri Lankan President Mahinda Rajapaksa suffered serious defections, the election commission today set January 8, 2015 as the date for a snap presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X