இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து யாழ்ப்பாணத்தில் இன்று தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கையின் 69-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இந்த சுதந்திர தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

Tamils boycott Sri Lanka Independence Day

யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமை வகித்தார். இதில் அனந்தி சசிகரன், சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்; தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு சர்வதேச நாடுகள் உதவியுடன் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Eelam Tamils today boycott the Srilanka's Independence Day.
Please Wait while comments are loading...