நாடாளுமன்றத் தேர்தல்.. யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் தமிழர் கட்சிகளின் பிரசாரம்
யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்துள்ளது. அங்கு பல்வேறு தமிழர் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. யாழ்ப்பாணம் முழுவதும் இவர்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். போலீஸாரின் பல்வேறு கெடுபிடிகள், தடைகள், கட்டுப்பாடுகள் இருந்தபோதும் பிரசாரம் சூடாகவே உள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினர். அவர்களது ஆதரவாளர்களும், பெரும் திரளான மக்களும் பிரசாரத்தைக் கேட்க வந்திருந்தனர்.
இதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதலாவது பொதுக்கூட்டம் வரலாறு புகழ்மிக்க வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கர்னல் கிட்டு உள்ளிட்ட 10 முக்கிய புலிகளின் தலைவர்களின் நி்னைவிடங்கள் அமைந்துள்ள இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவீரர்கள் நினைவு பாடலைப் பாடிய பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications