For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதலை கண்ணீர்வடிக்கும் நாடுகள் அன்று பிரபாகரனை அழிக்க துணைநின்றன:பஷில் ராஜபக்சே

By Mathi
Google Oneindia Tamil News

Those who shed crocodile tears wanted us to finish off Prabhakaran – Basil
கொழும்பு: தமிழர் நிலைமை தொடர்பாக இன்று முதலை கண்ணீர்வடிக்கும் நாடுகள் அன்று இறுதி யுத்தத்தின் போது எங்களோடு கை கோர்த்து பிரபாகரனை கொல்ல விரும்பின என்று இலங்கை அமைச்சரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான பஷில் ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பஷில் ராஜபக்சே பேசியதாவது:

தமிழ் மக்களுக்காக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்ற வெளிநாடுகள் நினைத்திருந்தால் அன்று யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் எங்கள் அரசாங்கத்தைப் பயன்படுத்தி பிரபாகரனை அழிக்கும் தேவை அவர்களுக்கு அன்று இருந்தது. இலங்கையில் இருப்பது உள்நாட்டின் பிரச்சினை. இதில் அன்னிய தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம். எமது பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்வோம்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வடக்கில் அபிவிருத்திகளை மட்டுமின்றி ஜனநாயக முறைமைகளையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்த திணிக்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் நமக்கு பயனுடையதாக இருக்காது என்றார்.

English summary
Some countries that shed crocodile tears today for the cause of Tamils wanted Sri Lanka to eliminate the LTTE leader Velupillai Prabhakaran during the last days of the North East Conflict, Economics Development Minister Basil Rajapaksa told Parliament yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X