பூங்காவில் இருந்து தப்பிய சிங்கங்கள்! மனிதர்கள் மீது பாய தயாரான "அந்த நொடி".. திக் திக் வீடியோ!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்கள் தப்பிச் சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில், சிங்கங்கள் உயிரியல் பூங்காவின் வேலிகளை தாண்டி குதித்து தப்புவதும், பின்னர் அங்கு நடமாடிக் கொண்டிருந்த மனிதர்கள் மீது பாய எத்தனிப்பதும் தெரியவந்துள்ளது.
சிங்கங்கள் தப்பும் அளவுக்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட உயிரியல் பூங்கா நிர்வாகத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
சிங்கங்கள் எஸ்கேப் ஆகிடுச்சே.. பத்தே செகண்டில் மொத்த உயிரியல் பூங்காவும் காலி - அலறிய ஆஸ்திரேலியா

பிரம்மாண்ட உயிரியல் பூங்கா..
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 'டரோங்கோ' உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இது, உலக அளவில் புகழ்பெற்றது ஆகும். அனைத்து வன விலங்குகளும் சுதந்திரமாக நடமாடும் வகையில் 'சஃபாரி' ஸ்டைல் உயிரியல் பூங்காவாக இது விளங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த உயிரியல் பூங்காவுக்கு நிச்சயம் செல்வார்கள். ஆசிய சிங்கங்கள், ஆப்பிரிக்கா சிங்கங்கள், புலிகள், யானை, முதலை என ஏராளமான விலங்குகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தப்பித்த சிங்கங்கள்
இந்நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 3-ம் தேதி இந்த உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை கணக்கிடும் வழக்கமான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கங்கள் இருக்கும் பகுதியில் 2 ஆண் சிங்கங்களும், 3 பெண் சிங்கங்களும் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுகுறித்து உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து, உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் ஒலிப்பெருக்கிகள் வாயிலாக சிங்கங்கள் தப்பித்த தகவலைக் கூற, அடுத்த 10 நொடியில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுதொடர்பான செய்திகளும் அந்த சமயங்களில் ஊடகங்களில் வெளியாகின.

மனிதர்கள் மீது பாய..
இதன் தொடர்ச்சியாக, மக்கள் வெளியேறியதை அடுத்து, 24 மணிநேரத்துக்குள்ளாக அந்த சிங்கங்களை மயக்க ஊசி செலுத்தி ஊழியர்கள் பிடித்தனர். இந்நிலையில், சிங்கங்கள் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், உயிரியல் பூங்காவில் இருந்த பெரிய திண்டின் மீது ஏறி அங்குள்ள வேலியை எகிறி குதித்து வெளியேறுகின்றன. பின்னர் மக்கள் நடமாடும் சாலையை ஒரு மேடான பகுதியில் இருந்து பார்க்கும் சிங்கங்கள், அவர்கள் மீது பாய எத்தனித்தன. ஆனால், சிங்கங்கள் அங்கு இருப்பதை மனிதர்கள் பார்க்கவில்லை.

"இவ்வளவு ஜாக்கிரதையா?"
மனிதர்கள் மீது பாய முயற்சித்த சிங்கங்கள், அடுத்த நொடியில் என்ன நினைத்ததோ தெரியவில்லை. அப்படியே சாதுவாக ஒன்றையொன்று பார்த்த சிங்கங்கள், அங்கிருந்து மீண்டும் உயிரியல் பூங்காவுக்கே சென்றுவிடுகின்றன. சமூக வலைதளங்களில் பரவிய இந்த சிசிடிவி காட்சிகள் அனைவரையும் குலைநடுங்கச் செய்துள்ளன. நல்ல வேளையாக, இந்த சிங்கங்கள் மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்கவில்லை. சிங்கங்கள் தப்பிச் செல்லும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்த உயிரியல் பூங்கா நிர்வாகத்துக்கு ஆஸ்திரேலியா அரசும், பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.