பலநூறு கோடி! 300 வருடம் பழையது! சுரங்கத்தை தோண்டிய மக்கள் கண்ட "பிங்க்" அதிசயம்.. ராக்கி பாய் எங்கே?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுரங்கம் ஒன்றில் மிகவும் பழமையான பிங்க் நிற வைரத்தை சுரங்க ஊழியர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
கேஜிஎப் படத்தில் தங்க சுரங்கத்திற்கான மோதலும், அதை ராக்கி பாய் எப்படி கட்டி ஆண்டான் என்பதும் கதையாக பேசப்பட்டு இருக்கும். அந்த கேஜிஎப் தங்க வயல் போலவே ஆஸ்திரேலியாவில் இருக்கும் வைர வயல் ஒன்று உலகம் முழுக்க கவனம் ஈர்த்து உள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் வைர சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அதிலும் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் அதிக அளவில் வைர சுரங்கங்கள் உள்ளன.
உலகிலேயே அதிக அளவிலான டயமண்ட் போட்ஸ்வானா நாட்டில் ஓரப்பா சுரங்கத்தில் எடுக்கப்படுகிறது. உலகிலேயே இந்த சுரங்கத்தில்தான் அதிக வைரம் இருப்பதாக நம்பப்படுகிறது.

வைரம்
ஆனால் இந்த சுரங்கத்தில் கூட கிடைக்காத மிகவும் விலை உயர்ந்த வைரம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆங்க்லோ என்ற சுரங்கத்தில்தான் இந்த வைரம் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பிங்க் நிறத்தில் இருக்கும் வினோத வைரம் ஆகும் இது. ராட்சச அளவு கொண்ட விசித்திர தோற்றம் கொண்டது இது.

ஆஸ்திரேலியா
இந்த வைரம் கவனம் பெற காரணமே அதன் நிறம்தான். அந்த வைரம் பிங்க் நிறம் கொண்டது ஆகும். அதோடு இது 300 ஆண்டுகள் பழையது. இது 170 கேரட் சுத்தமான வைரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கத்திற்கு பெயர் லுலோ மெயின் சுரங்கம் ஆகும். இதற்கு லுலோ ரோஸ் வைரம் என்று பெயர் வைத்து உள்ளனர். அந்த நிறுவனம் கண்டுபிடித்ததிலேயே மிக பெரிய வைரம் இதுதான்.

சுரங்கம்
அதேபோல் அவர்கள் கண்டுபிடித்ததிலேயே மிக பழமையான வைரம் இதுதான். உலகிலேயே மிகவும் அரிதாக கிடைக்கும், மிக மிக சுத்தமான வைரம் இதுதான் என்று சுரங்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உலகில் இதே அளவில், பிங்க் நிறத்தில் வைரம் கிடைப்பது மிகவும் கடினம். இதை ஏலம் விட முடிவு செய்து இருக்கிறோம். இதை கட் செய்து பாலிஸ் செய்ய வேண்டும்.

பிங்க்
அப்படி செய்யும் போது இதன் எடையில் பாதி குறைந்து போக்கும். ஆனாலும் இதன் மதிப்பு 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். ஹாங்காங்கில் 60 கேரட் பிங்க் வைரம் 500 கோடிக்கு ஏலம் போனது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டது அதை விட பழையது, அதைவிட அதிக மதிப்பு கொண்டது. இதன் காரணமாக இந்த புதிய வைரம் கண்டிப்பாக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு ஏலம் போகும் என்று சுரங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications