சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தப்பிக்க முடியுமா".. ஷாகிப் செய்த அந்த தவறு.. கப்பென பிடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சிட்னி: வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான டி 20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்ட படியே அக்சர் பட்டேல் களமிறங்கி உள்ளார். தீபக் ஹூடா நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக், கே எல் ராகுல் இருவரும் நீக்கப்படவில்லை.

இதனால் இன்று ஆடும் இந்தியாவில் ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று களமிறங்கி உள்ளனர்.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியதால் முதல் பாலில் இருந்தே அதிரடி காட்டியது. ரோஹித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இன்னொரு பக்கம் கே எல் ராகுல் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி அடித்தார். கடந்த 10 போட்டிகளுக்கும் மேலாக சரியாக ஆடாமல் சொதப்பி வந்த ராகுல் இன்று அசத்தலாக ஆடினார். முக்கியமாக 4 சிக்ஸர் அடித்தார்.

ராகுல்

ராகுல்

அதேபோல் 3 பவுண்டரி அடித்தார். சரியாக 50 ரன்கள் எடுத்த அடுத்த பந்தே இவர் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் வந்ததில் இருந்தே அதிரடியாக ஆடினார். வந்ததில் இருந்தே அதிரடியாக ஆடி 4 பவுண்டரிகளை எடுத்தார். 16 பந்தில் 30 ரன்கள் எடுத்து இவர் அவுட்டானார். இன்னொரு பக்கம் விராட் கோலி நிதானமாகவும், அவ்வப்போது அடித்தும் ஆடி வந்தார். இந்த தொடரில் இதன் மூலம் 3 வது அரை சதம் அடித்தார்.

ஷகீப்

ஷகீப்

இன்றைய போட்டியில் ஷகீப் அல் முக்கியமான தவறு ஒன்றை செய்தார். கேப்டன் ஆன அவர்.. தொடக்கத்திலே டஸ்கின் ஓவரை கொடுத்து முடித்தார். டஸ்கின்தான் அந்த அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்தார். 4 ஓவர் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்தார். ஆனால் அப்படிப்பட்ட டஸ்கினுக்கு தொடக்கத்திலேயே 4 ஓவர் கொடுத்து முடித்தார்.

மோசம்

மோசம்

பொதுவாக மோசமாக பவுலிங் செய்யும் வீரர்களை மிடில் ஓவர்களில் போட விட்டு ஓவரை முடிப்பார்கள். நல்ல பவுலர்களை டெத் ஓவர்களுக்கு வைத்துக்கொள்வார்கள். ஆனால் இன்று நல்ல பவுலர்களை எல்லாம் ஷகீப் 15 ஓவருக்குள் முடித்துவிட்டார். ஷோரிபுல் இன்று மோசமாக பவுலிங் செய்தார். அவர் 3 ஓவரில் 43 ரன்கள் கொடுத்தார். அவருக்கு இடையில் ஓவர் கொடுத்து முடிக்காமல் கடைசி வரை ஷகீப் வைத்து இருந்தார்.

 தப்பிக்க முடியாது

தப்பிக்க முடியாது

இதை பயன்படுத்திக்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடினார்கள். அதன்பின் டெத் ஓவர்களிலும் அதிரடியாக ஆடினார்கள். ஷகீப் செய்த ஒரு தவறை இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். இன்று பவுலிங் செய்ததில் டஸ்கின், ஷகீப் தவிர வங்கதேச வீரர்கள் பெரிதாக பவுலிங் செய்யவில்லை.

English summary
India vs Bangladesh T 20 World Cup: Various mistakes of Shakib Al Hasan against men in blue Top order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X