சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென் பசிபிக் கடலில் நியூ கலிடோனியா அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Google Oneindia Tamil News

சிட்னி: தென் பசிபிக் கடலில் நியூ கலிடோனியா அருகே 7.7 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அருகே உள்ள தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பகுதி நியூ கலிடோனியா. இது பிரான்சிற்கு சொந்தமான பகுதியகும். இந்த பகுதிக்கு அருகே கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

tsunami warnings withdraw by Australia, New Zealand as threat from Pacific quake eases

தென் பசிபிக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அடுத்த 3 மணி நேரத்தில் வரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து, நியூ கலிடோனியா, வனடு பகுதிகளுக்கு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர் .

ஆனால் எச்சரிக்கை விடுத்தபடி எந்த பாதிப்பும் நியூசிலாந்து, நியூ கலிடோனியா, வனடு பகுதிகளில் ஏற்படவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் சுனாமி எச்சரிக்கையை விலக்கி கொண்டன.

English summary
A 7.7 magnitude undersea earthquake struck the South Pacific region on Thursday, triggering a brief tsunami warning for Australia and New Zealand that was cancelled, with no immediate reports of damage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X